scorecardresearch

ரஜினிகாந்த் தெலுங்கு பேச்சு: ட்விட்டரில் வைரல்

மறைந்த சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான என்.டி.ராமராவ் அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

rajinikanth
என்.டி.ஆர்., 100வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சீனியர் என்.டி.ஆர்.,இன் நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் அவர் தெலுகுவில் உரை வழங்கியதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

என்.டி.ராமாராவின் 100வது பிறந்தநாளில் ரஜினிகாந்த், அவரது தாக்கத்தை நினைவுகூர்ந்து பாலகிருஷ்ணாவுக்குப் பாராட்டுக்களை குவித்தார்.

மறைந்த சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான என்.டி.ராமராவ் அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

72 வயதான சூப்பர் ஸ்டார் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருடன் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விஜயவாடாவில் நடந்த இந்த நிகழ்ச்சி, இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “நந்தமுரி பாலகிருஷ்ணா திரையில் செய்வதை அமிதாப் பச்சனோ, ஷாருக்கானோ செய்ய முடியாது. மேலும், தெலுங்கு மக்கள் என்.டி.ஆரின் படத்தை பாலையாவில் பார்க்கிறார்கள், அதனால்தான் எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள்”, என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Super star rajinikanth praises balakrishna at senior ntr 100th birthday event