Advertisment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமனத்தில் எகானமி வகுப்பில் பயணம்; ரசிகர்கள் ஆச்சரியம்; வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இண்டிகோ விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்ததைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு ரசிகர் “கடவுளுக்கு நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன்” என்று வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth economy class

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடப்பாவில் இருந்து இண்டிகோ விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rajinikath viral video: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடப்பாவில் இருந்து இண்டிகோ விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்ததைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு ரசிகர் “கடவுளுக்கு நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன்” என்று வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இண்டிகோ விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்ததைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்வது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், தொழிலதிபர்கள், மிகப் பெரிய பணக்காரர்கள், பிரபலங்கள் பலரும் விமானப் பயணத்தில் ஃபர்ஸ் கிளாஸ் (முதல் வகுப்பு) இருக்கைகளிலேயே பயணம் செய்வார்கள். மிக அரிதாக எகானமி வகுப்பில் பயணம் செய்வார்கள். விமானங்களில் எகானமி வகுப்புக்கும் முதல் வகுப்புக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட் விலை மிகவு அதிகம், அதற்கு ஏற்ப பயணமும் சௌகரியமாக இருக்கும். விமானத்தில் முதல் வகுப்பு பயணிக்கு அளிக்கப்படும் உணவின் தரம் மாறுபடும். உணவு சுவையானதாகவும் தரமானதாகவும் இருக்கும். முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கை, இடவசதி ஆகியவையும் மாறுபடும். இருக்கைகள் பெரியதாகவும் அகலமாகவும் இருக்கும். கால்களை வைத்துக் கொள்வதற்கு போதுமனா இடவசதி இருக்கும். 

ஆனால், எகானமி வகுப்பில், இருக்கைகள் சௌகரியமாக இருக்காது. நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது. அசௌகரியமாக இருக்கும். அதனால், விமானத்தில் எகானமி வகுப்பில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் பயணிப்பது இல்லை. மிக அரிதாகவே பயணம் செய்வார்கள். அப்போது எல்லாம் அவர்களின் எகானமி வகுப்பு பயணம் ஊடகங்களில் செய்தியாவது உண்டு.

அந்த வகையில், சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எகானமி வகுப்பில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து, நடிகர் ரஜினிகாந்த் விமானம் ஏறியபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்வதைக் கண்டு ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர்.

'ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். 

கடப்பாவில் இருந்து விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பயணம் செய்த ஒரு ரசிகர் ரஜினிகாந்துடன் சில வார்த்தைகளைப் பேசினார். “கடவுளுக்கு நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன்” என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் தனது இருக்கையில் அமர்ந்து தனது ஏர்போட்களுடன் ஃபிட் செய்வதைக் காட்டுகிறது. அவர் மிகவும் எளிமையாகவும் அடக்கமாகவும் இருந்ததைக் கண்டு விமானத்தில் இருந்த பயணிகள் ஆச்சரியம் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடப்பாவில் இருந்து இண்டிகோ விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்தபோது , ஜன்னலோர இருக்கைக்கு அருகே நீல நிற சட்டை மற்றும் பழுப்பு நிற பேன்ட் அணிந்து அமர்ந்திருந்தார்.

சமீபத்தில், 'வேட்டையன்' படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் போலீஸ் சீருடையில் காணப்பட்டார். இதனால், இந்த படத்தில் ரஜினிகாந்த் முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக வதந்திகள் பரவியது.

ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த படம்  மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்து இது முதல்முறை அல்ல. அவர் இதற்கு முன்பு எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளார். இதே போல, சமீபத்தில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment