New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/nilgiris.jpg)
ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தமிழகத்தில் உள்ள நீலகிரி பூமியில் ஒரு சொர்க்கம் என்று நீலகிரி மலையின் பேரழிலை வீடியோவாகப் பதிவிட்டு வியந்துள்ளார். நீலகிரி மலைகளின் பேரழகைக் காட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தமிழகத்தில் உள்ள நீலகிரி பூமியில் ஒரு சொர்க்கம் என்று நீலகிரி மலையின் பேரழிலை வீடியோவாகப் பதிவிட்டு வியந்துள்ளார். நீலகிரி மலைகளின் பேரழகைக் காட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள மலைப் பிரதேசங்கள் சுற்றுலா இடங்களாக திகழ்கிறது. பசுமைப் போர்த்திய மலைகள், மலைப் பிரதேசங்களில் உள்ள குளிர்ச்சி, வனங்களின் பிரமிப்பு அதன் மலைகளின் பேரழகு ஆகியவை மக்களை ஈர்க்கின்றன. அதனால்தான், பலரும் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர்.
மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் புகைப்படங்கள், வீடியோக்க்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
A piece of heaven on earth .. Nilgiris, TN, India. Zoom to see the Bhavani river flowing in the horizon #Nilgiris @incredibleindia pic.twitter.com/2KhWJHcZ8n
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 29, 2020
ஐஏஸ் அதிகாரியான சுப்ரியா நீலகிரி மலையின் அழகிய தோற்றத்தை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ குறித்து சுப்ரியா குறிப்பிடுகையில், “தமிழகத்தில் உள்ள நீலகிரி பூமியில் ஒரு சொர்க்கத் துண்டு. வீடியோவை ஜூம் செய்து பார்த்தால் பவானி ஆறு குறுக்காக பாய்வதை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக நீலகிரியை மலைகளின் ராணி என்று வர்ணிப்பார்கள். அதோடு, ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா கூறியுள்ள பூமியில் ஒரு சொர்க்கத் துண்டு” என்ற அடைமொழியும் சேர்த்துக்கொள்ளலாம் என்று தாராளமாகக் கூறலாம்.
சுப்ரியா ஐஏஎஸ் தமிழ்நாடு தேயிலை முதன்மை செயலாளராகவும் நிர்வாக அலுவலராகவும் நீலகிரியை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும் உள்ளார்.
சுப்ரியாவின் பதிவு செய்துள்ள நீலகிரியின் பேரழகு வீடியோவை பலரும் பாராட்டி பகிருந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.