Advertisment

மலைவாழ் மக்களின் நாயகன் - தபால்காரர் சிவன் : வைரலாகும் பதிவு

Supriya Sahu twitter post : வனப்பகுதிகள் வழியாகவும், மலைரயில் பாதை, பாலங்கள், குகைகள் வழியாகவும், நாள்தோறும் வேகவேகமாக நடந்து வரும் இவரின் வேகத்துக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supriya Sahu, twitter, postman D. Sivan, post delivert through walk, niligiris, coonoor, tribal people, video., netizens, viral video, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

Supriya Sahu, twitter, postman D. Sivan, post delivert through walk, niligiris, coonoor, tribal people, video., netizens, viral video, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

நாள்தோறும் 15 கிலோமீட்டர் தொலைவு நடந்தே சென்று தபால்களை பட்டுவாடா செய்யும் தபால் ஊழியர் சிவன் குறித்த சுப்ரியா சாஹூவின் டுவிட்டர் பதிவு, நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.

Advertisment

குன்னுாரில் இருந்து, நாள்தோறும், 15 கி.மீ., துாரம் நடந்து சென்று, ஏழை மக்களின் தபால்களை பட்டுவாடா செய்யும், ஊழியர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவன்,62. கடந்த, 30 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றி வரும் இவர், தற்போது ஹில்குரோவ் தபால் நிலையத்தில், ஆறு ஆண்டுகளாக கிராம தபால்காரராக பணியாற்றி வருகிறார்.நாள்தோறும் காலை குன்னுார் தபால் நிலையத்துக்கு வந்து, தபால்களை பெற்று, சிங்காரா வரை பஸ்சில் செல்கிறார்.

பின்னர், அங்கிருந்து வனப்பகுதி வழியாக ஹில்குரோவ் தபால் நிலையத்துக்கு நடந்து சென்று தபால்களை ஒப்படைக்கிறார்.பிறகு அங்கிருந்து தபால்களை பெற்று, ஹில்குரோவ் ரயில் நிலையம், வடுகதோட்டம், மரப்பாலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பழங்குடியின மற்றும் ஏழை மக்களிடம் பட்டுவாடா செய்து வருகிறார்.

இந்த கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள், ஏழை மக்கள், படிப்பறிவு குறைந்த மக்களின், தபால் துறையில் சேமிப்பு, சிறு சேமிப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை, மணி ஆர்டர், பதிவு தபால் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்த்து வருகிறார்.

அப்பகுதி மக்கள் கூறுகையில்,'வனப்பகுதிகள் வழியாகவும், மலைரயில் பாதை, பாலங்கள், குகைகள் வழியாகவும், நாள்தோறும் வேகவேகமாக நடந்து வரும் இவரின் வேகத்துக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. இந்த,62 வயது இளைஞரின் அர்ப்பணிப்பான பணி, தபால் துறைக்கே மணிமகுடமாக விளங்குகிறது. சில நேரங்களில், எங்களுக்கு தபால் கொடுக்க வரும் போது, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இவரை விரட்டியுள்ளதால், உயிரை கையில் பிடித்து ஓடி தப்பித்துள்ளார்' என்றனர்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக, சுப்ரியா, அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்களின் பாராட்டுகள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Twitter Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment