New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/09/image-4-2.jpg)
2000 கிலோ எடையுள்ள காண்டாமிருகத்திடம் தனியாக மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிப்பது?
2000 கிலோ எடையுள்ள காண்டாமிருகத்திடம் தனியாக மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிப்பது என்பது குறித்து இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பதிவில் மூலம் விளக்கியுள்ளார்.
That’s 2000kg plus pounding at you with 50 plus kms per hour? But any guess as to why it gives up at the end & goes inside the forest? pic.twitter.com/iSYtdEstgL
— Susanta Nanda IFS (@susantananda3) September 11, 2020
Rhinos eyesight is relatively poor. It finds difficult to spot an observer beyond 30mts.Once the vehicle distance was more than that with the rhino, it most probably gave up.Also rhino tend to charge in the same direction once they charge. Run in the opposite direction if u can.
— Susanta Nanda IFS (@susantananda3) September 12, 2020
வீடியோ ஒன்றில், காண்டாமிருகம் வாகனத்தை கடுமையாக துரத்துகிறது. ஒரு கட்டத்தில் வாகனத்தை பிடித்து விடும் என்று பதட்டமும் நம்முள் எழுகிறது. அபயாத்தை உணர்ந்த ஓட்டுனர், உடனடியாக தனது வேகத்தை அதிகரிக்கிறார். இறுதியில், காண்டாமிருகம் தனது இயலாமையை ஒத்துக் கொண்டு காட்டுக்குள் திரும்புகிறது.
சுசந்தா நந்தா தரும் விளக்கம்: காண்டாமிருகத்தின் கண்பார்வை மற்ற விலங்குகளை ஒப்பீடுகையில் மோசமானது. 30 மீட்டருக்கு அப்பால் உள்ள ஒருவரை அதனால் கண்டறிய முடியாது. இந்த தூர இடைவெளியைத் தாண்டி வாகனம் செல்லத் தொடங்கியதால், காண்டாமிருகம் தனது முயற்சியை கைவிட்டது. மேலும், காண்டாமிருகம் ஒருவரை தாக்க நினைத்தவடன் ஒரே திசையில் செல்ல முயற்சிக்கும். எனவே, வாய்ப்பு இருந்தால் எதிர் திசையில் செல்ல முயற்சியுங்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.