Advertisment

வைரலாகும் வீடியோ: பொதுமக்களால் ரோட்டில் வைத்து தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ்

சுவாமி அக்னிவேஷ்   மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 சுவாமி அக்னிவேஷ் 

 சுவாமி அக்னிவேஷ் 

டெல்லியில்  சுவாமி அக்னிவேஷ்  ரோட்டில் வைத்து பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்:

கொத்தடிமை முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருபவர் சுவாமி அக்னிவேஷ்(79). சமீபகாலமாக இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இவர் பேசி வருவதாக சுவாமி அக்னிவேஷ்   மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பாஜக  தொண்டர்கள் சிலர் சுவாமி அக்னிவேஷை சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம்பெற்றிருந்த அக்னிவேஷ் பா.ஜ.க.வினரால் தாக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தீன் தாயல் தெருவில்  சென்ற   சுவாமி அக்னிவேஷை  அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக அடித்துள்ளனர்.

 

 எதனால்   சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment