Advertisment

நடிகை டாப்ஸி பண்ணுவை தொந்தரவு செய்யாமல் கடந்து சென்ற ஸ்விக்கி டெலிவரி ஏஜெண்ட்; வைரல் வீடியோ

உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் நடிகை டாப்ஸி பண்ணு எதிரில் வந்தபோது, அவரை நிறுத்தி செல்ஃபி கேட்டு தொந்தரவு செய்யாமல் ஸ்விக்கி டெலிவெரி ஏஜெண்ட் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
tapsee

நடிகை டாப்ஸி பண்ணு எதிரில் வந்தபோது, அவரை நிறுத்தி செல்ஃபி கேட்டு தொந்தரவு செய்யாமல் ஸ்விக்கி டெலிவெரி ஏஜெண்ட் கடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் நடிகை டாப்ஸி பண்ணு எதிரில் வந்தபோது, அவரை நிறுத்தி செல்ஃபி கேட்டு தொந்தரவு செய்யாமல் ஸ்விக்கி டெலிவெரி ஏஜெண்ட் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பிரபல நடிகை எதிரில் வந்தாலும் பணியில் கவனமாக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஸ்விக்கி டெலிவரி ஏஜெண்ட்டை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

 ஆங்கிலத்தில் படிக்க: ‘Focused, flourishing’: Swiggy on video showing delivery agent walking past Taapsee Pannu

ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் ஒருவர், நடிகை டாப்ஸி பண்ணுவை நிறுத்தி தொந்தரவு செய்யாமல் கடந்து சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு கட்டிடத்தின் நுழைவு வாயிலின் அருகே ஸ்விக்கி ஏஜென்ட் நிற்கிறார். அப்போது, பிரபலங்களை படம்பிடிக்கும் சுயாதீன புகைப்படக் கலைஞர்கள் அவரை அங்கே இருந்து வெளியே செல்லுமாறு கூறும் வீடியோவில் அந்த ஏஜெண்ட்டின் செயல் பலரையும் திகைக்க வைத்துள்ளது.

ஸ்விக்கி டெலிவரி ஏஜண்ட் உணவரி டெலிவரி செய்வதற்காக அந்த இடத்தில் வளாகத்திற்குள் நுழையும்போது, ​​​​டாப்ஸி பண்ணு-கருப்பு ஆடை அணிந்து எதிரே வருகிறார். அப்போது, ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் டாப்ஸி பண்ணுவை செல்ஃபி எடுக்க வேண்டும் என்றோ அல்லது போட்டோ எடுப்பதற்காக நிறுத்தாமல் கட்டிடத்திற்குள் நுழைந்து கடந்து செல்கிறார்.

இந்த வீடியோவை எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், திவ்யா கந்தோத்ரா டாண்டன் என்ற பயனர் பகிர்ந்துள்ளார். ஸ்விக்கியை டேக் செய்து குறிப்பிடுகையில், “ஹே @Swiggy, இந்த டெலிவரி பார்ட்னர் அவருடைய அர்ப்பணிப்புக்கு ஊக்கமளிக்கத் தகுதியானவர்!!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பதிலளித்த ஸ்விக்கி, “தொந்தரவு செய்யவில்லை. ஈரத்துடன், சந்தோஷமாக. என் பாதையில். கவனம். செழிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ எக்ஸ் சமூக வலைதளத்தில் 1,42,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. ஸ்விக்கி டெலிவரி ஏஜெண்ட்டை மோசமாக நடத்தியதற்காக பல பயனர்கள் பிரபலங்களை போட்டோ எடுக்கும் சுயாதீன புகைப்படக் கலைஞர்களை அவதூறாகப் பேசினர். 

“கடமையில் கவனம் செலுத்தியதற்காக அந்த ஸ்விக்கி டெலிவரி ஏஜெண்ட், உண்மையில் போனஸுக்கு தகுதியானவர்” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

டன்கி படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த டாப்ஸி பண்ணு, தடகள வீரர் மத்தியாஸ் போயை மார்ச் 23-ம் தேதி உதய்பூரில் அனுராக் காஷ்யப், அபிலாஷ் தப்லியால், பாவைல் குலாட்டி மற்றும் பலர் உட்பட நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Swiggy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment