'போனா வராது பொழுதுபோனா கிடைக்காது'.. பிரபல நடிகையின் குளியல் நீரில் சோப்! விலை எவ்வளவு தெரியுமா?

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர் துளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட சோப்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது அமெரிக்காவின் Dr. Squatch நிறுவனம். ஜூன் 4-ம் தேதி முதல் முதற்கட்டமாக 5,000 சோப்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக ஸ்வீனி அறிவித்துள்ளார்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர் துளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட சோப்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது அமெரிக்காவின் Dr. Squatch நிறுவனம். ஜூன் 4-ம் தேதி முதல் முதற்கட்டமாக 5,000 சோப்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக ஸ்வீனி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sydney Sweeney

'போனா வராது பொழுதுபோனா கிடைக்காது'.. பிரபல நடிகையின் குளியல் நீரில் சோப்!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, சோப்புகள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்களுக்கான சோப்புகளை தயாரிக்கும் டாக்டர் ஸ்குவாட்ச் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து இந்த புதிய சோப் வகையை உருவாக்கி உள்ளனர். பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருள்களுடனான கலவையுடன் சிட்னி குளித்த நீர்த்துளிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

sydney sweeney

குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே இந்த சோப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், ஜூன் 6 முதல் விற்பனை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இதில் குறிப்பாக ஜூன் 4-ம் தேதிக்குள்ளாக நிறுவனத்தின் இணையத்தில் பதிவு செய்யும் முதல் 100 நபர்களுக்கு இலவசமாக பரிசளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய குளியல் நீரில் உருவான அந்த சோப்க்கு “சிட்னியின் குளியல் நீர் பேரின்பம்” (Sydney’s Bathwater Bliss) என பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

இந்த சோப்பின் விலை ஒரு பட்டையின் மதிப்பு 8 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.685-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இன்னும் இந்த சோப் விற்பனைக்கு வரவில்லை வரும் ஜூன் 6, 2025 முதல் டாக்டர் ஸ்குவாட்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த சோப் விற்பனைக்கு கிடைக்கும். இதனால் இவை விரைவில் விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், ஜூன் 5 வரை நடக்கும் புரோமோஷனல் லாட்டரியில் வெற்றிபெறும் 100 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த சோப் இலவசமாக வழங்கப்படுகிறது.

சிட்னி ஸ்வீனி இந்த தயாரிப்பு குறித்து பேசுகையில், “எனது ரசிகர்கள் என் குளியல் நீரைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்தனர், அதனைப் பயன்படுத்தி ஒரு சோப்பை உருவாக்குவது வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான யோசனையாக இருந்தது,” என்று கூறினார்.

நடிகையின் இந்த முயற்சி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை பெற்றுள்ளது. ஏனென்றால், பலரும் “இதை வாங்கும் அளவுக்கு யாராவது ஆர்வமாக இருப்பார்களா?” என்றும் மேலும் சிலர் புதிதாக ட்ரெண்ட் ஆகுவதற்கு மார்கெட்டிங்கிற்காக இப்படி செய்துகொண்டு இருக்கிறார்கள் எனவும் விமர்சித்து பேசியுள்ளனர்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: