மழை நேரத்தில் குழந்தைகளின் சமூகப் பொறுப்பு: குவியும் பாராட்டு

sylendra babu latest Tweet : மழை நேரத்தில் குழந்தைகளின் சமூகப் பொறுப்பு: குவியும் பாராட்டு

By: Updated: January 8, 2021, 07:58:53 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.  இதனால், நகரத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ளன.

இந்நிலையில், சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கிய  குழியை  பொதுமக்கள் நலனுக்காக இரும்புக் கட்டில் மற்றும் மரப்பலகை கொண்டு அதை மூடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு , தனது ட்விட்டர் பதிவில், ” இந்த குழந்தைகளின் சமுதாயப்பொறுப்பு வியக்க வைக்கிறது. இவர்களுக்கு சலூட். இவர்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டார்.

 

 

இந்த குழந்தைகளை பாராட்டியே ஆகனும்.
அதே சமயம் மக்கள் நலனில் அக்கறை கொண்ட குழந்தைகளை பாராட்டிய காவல்துறை அதிகாரி அவர்களுக்கு மக்கள் அனைவரும் நன்றி சொல்லியே ஆகணும். பாராட்டுக்கள் நல்லவர்களை ஊக்குவிக்கும்.
பலர் முன் வருவார்கள் என்று ட்விட்டர் பயணர் ஒருவர் சைலேந்திர பாபுவுக்கு பதிலளித்தார்.

 

இந்த குழந்தையின் சமூகப் பொறுப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்துயுள்ளது.

 

 

 

முன்னதாக, சென்னையில் பெய்த கனமழை காரணமாக இரும்புலியூர் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த தாய் கரோலினா – மகள் இவாலின் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தையும்,  மழை தண்ணீர் தேங்கியதன் விளைவாக  8 அடி செப்டிக் டேங்கில் விழுந்து மாற்றுத்திறனாளி எஸ். சரண்யா உயிரிழந்த கோர சம்பவத்தையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sylendra babu ips tweets about children social responsibility went viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X