'அய்யோ பாவம்!' - சாலையில் நடந்து செல்லும் வால் இல்லாத முதலை: வைரல் வீடியோ

தெற்கு லூசியானாவில் வால் இல்லாத முதலை ஒன்று சாலையைக் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பல பார்வையாளர்கள் ஆரம்பத்தில் இந்த அசாதாரணக் காட்சியை ஒரு பெரிய நாய் என்று தவறுதலாக நினைத்துள்ளனர்.

தெற்கு லூசியானாவில் வால் இல்லாத முதலை ஒன்று சாலையைக் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பல பார்வையாளர்கள் ஆரம்பத்தில் இந்த அசாதாரணக் காட்சியை ஒரு பெரிய நாய் என்று தவறுதலாக நினைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
tailless

ஆடோபான் உயிரியல் பூங்காவின் ஊர்வன நிபுணர் ராபர்ட் மெண்டிக் விளக்கமளித்ததாவது, "அந்த முதலை மற்றொரு முதலையுடன் நடந்த கடுமையான சண்டையில் தன் வாலை இழந்திருக்கலாம்" (Image Source: @nypost/Instagram).

தெற்கு லூசியானாவில் வால் இல்லாத முதலை ஒன்று சாலையைக் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பல பார்வையாளர்கள் ஆரம்பத்தில் இந்த அசாதாரணக் காட்சியை ஒரு பெரிய நாய் என்று தவறுதலாக நினைத்துள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

ஆஷ்லின் பார்த்தலோமியூ தனது ஃபேஸ்புக்கில் பதிவுசெய்து பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், முதலை மெதுவாக நெடுஞ்சாலையைக் கடந்து செல்கிறது. பிளாகுமெயின்ஸ் பாரிஷில் உள்ள நெடுஞ்சாலை 23ஐ முதலை கடந்து செல்லும் காட்சியை வீடியோவில் காணலாம். தன் குழந்தைகளை பேஸ்பால் பயிற்சிக்கு விட்டுவிட்டு வந்த பார்த்தலோமியூ, முதலில் என்ன பார்க்கிறோம் என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். "அது முதலையா அல்லது ஒரு பெரிய நாயா என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், வால் இல்லாத முதலை மெதுவாக சாலையைக் கடந்து செல்வதைப் பார்த்து, "என்ன?" என்று அவர் வியப்புடன் கூறுவது தெளிவாகக் கேட்கிறது. வீடியோவைப் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, "எல்லோரும் கவனமாக இருங்கள். ஒரு அரை முதலை சாலையில் நடந்து செல்கிறது" என்று எச்சரிக்கையுடன் தலைப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

உள்ளூர் தகவல்களின்படி, ஆடோபான் மிருகக்காட்சிசாலையின் ஊர்வன நிபுணர் ராபர்ட் மெண்டிக், இந்த முதலை மற்றொரு முதலையுடன் நடந்த சண்டையில் தன் வாலை இழந்திருக்கலாம் என்று விளக்கினார். இதுபோன்ற காயங்கள் அசாதாரணமானவை அல்ல என்றும், முதலிகள் வியக்கத்தக்க வகையில் மீளக்கூடியவை என்றும், இது போன்ற பெரிய உறுப்பு இழப்புகளிலிருந்தும் உயிர்வாழும் என்றும் அவர் கூறினார்.

வீடியோவைக் காண:

இந்தக் காட்சியைப் பார்த்த பல சமூக வலைத்தளப் பயனர்கள் காயமடைந்த முதலைக்காக வருத்தம் தெரிவித்தனர். ஒருவர், "ரொம்ப வருத்தம்!!! காயம் பட்டது போல் தெரிகிறது. கொல்லாத மீட்பு சேவை இதற்கு உதவ முடியுமா?" என்று கேட்டார். மற்றொரு பயனர், "அய்யோ, பாவம் அதை தனியாக விட்டுவிடுங்கள்" என்று கருத்து தெரிவித்தார்.

"நான் அதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். முதலையின் ரசிகன் இல்லை, ஆனால் எந்த விலங்கும் காயப்படுவதையோ அல்லது வலியில் இருப்பதையோ நான் பார்க்க விரும்பவில்லை," என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், உலகம் முழுவதும் ஊர்வனவற்றை ஆவணப்படுத்துவதற்காக அறியப்பட்ட புகழ்பெற்ற பிரெஞ்சு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லூகாஸ் காட்டெரூ, புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் பகுதியில், தன் மேல் தாடையே இல்லாத ஒரு காட்டு அமெரிக்க முதலையைப் படம்பிடித்தார்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட தொடர்ச்சியான அற்புதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், முதலை நிலத்திலும் தண்ணீரிலும் அமைதியாக நகர்வது காணப்பட்டது. அதன் கீழ் தாடை மட்டுமே எஞ்சியிருக்க, பற்கள் முழுமையாக வெளியே தெரிந்து, சரியாக சீரமைக்கப்பட்ட அந்தப் படம் பல சமூக வலைத்தளப் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: