scorecardresearch

ஏலே மக்கா, பார்த்து இருந்துக்கோங்க, கூகுள் ஸ்டிரீட் வியூல அப்படியே தெரியுதாம்….

Nude couple caught in google street view : தைவான் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மத்தியில் நிர்வாணமாக இருந்த தம்பதியின் வீடியோ, கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

google street view camera, google street view camera captures naked couples in a car, google street view, google, google maps, taichung, trending, indian express news
google street view camera, google street view camera captures naked couples in a car, google street view, google, google maps, taichung, trending, indian express news, தைவான், கூகுள் ஸ்டிரீட் வியூ, கூகுள் மேப், கூகுள், வனப்பகுதி, நிர்வாண தம்பதி, டிரெண்டிங், இந்தியன் எக்ஸ்பிரஸ்

தைவான் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மத்தியில் நிர்வாணமாக இருந்த தம்பதியின் வீடியோ, கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகவும் மாறியுள்ளது.

தைவான் தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பார்த்து மகிழும்நோக்கில், கூகுள் மேப் செயலியில் உள்ள கூகுள் ஸ்டிரீட் வியூ பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியாக அவர்கள் பார்த்து வரும்போது வனப்பகுதியில் ஒரு கார் இருப்பது தென்பட்டது. அவர்கள் அதனை ஜூம் செய்து பார்த்ததில், அதில் தம்பதி நிர்வாணமாக இருப்பது தெரியவந்துள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள டாய்சுங் பகுதியில் உள்ள ஷான்டியன் சாலையில் தான் இந்த கார் நின்றுள்ளது. ஷான்டியன் சாலைப்பகுதியில் அதிகமாக வனவிலங்குகள் உலாவும் என்பதால், இந்த பகுதி, அந்நாட்டு மக்களால், இணையதளங்களில் அதிகம் தேடப்படும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில், நிர்வாணமாக தம்பதி இருந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான போட்டோக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோர் இதுகுறித்து புகார் அளித்ததை தொடர்ந்து கூகுள், அந்த போட்டோக்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Taiwan google street view nude couple