Tamil Vadivelu Memes Update : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வலம் வருபவர் வடிவேலு. கடந்த 1988-ம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான வடிவேலு 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். காமெடி ஜாம்பவான்களாக கவுண்டமணி செந்தில், வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்து பல படங்களில் வடிவேலு நடித்துள்ளார்.
அதன்பிறகு சோலோ காமெடியானாக உருவெடுத்த அவர், ரஜினி கமல் தொடங்கி விஜய் அஜித், சிம்பு, உள்ளிட்ட இன்றைய தலைமுறை நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடியில் முத்திரை பதித்துள்ளார். இம்சை அரசன் படத்தின் மூலம் நாயகனாக மாறிய இவர், சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இம்ச அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வடிவேலு
இந்நிலையில், வடிவேலு சில வருடங்கள் நடிக்காமல் இருந்தாலும் மக்கள் மத்தியில் அவருக்கான இடம் காலியாகவே இருந்தது. மேலும் திரையில் அவரை பார்க்க முடியவில்லை என்றாலும், அவர் படத்தை வைத்து வெளியிடப்படும் மிம்ஸ்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் வடிவேலு காமெடியுடன் வைரலாகி வரும் சில மீம்ஸ்கள் பார்ப்போம்.

சமூகவலைதளங்களை எடுத்துக்கொண்டால் வடிவேலு முகம இல்லாமல் ஒரு மீம்ஸ் கூட வராது என்று சொல்லும் அளவுக்கு வடிவேலு திரைத்துறையில் இல்லாத குறையை மீம்ஸ் தீர்த்து வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “