இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத விலைவாசி ஏற்றம் அந்நாட்டு மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது0. இந்த விலைவாசி ஏற்றத்தை கண்டித்து பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில். இலங்கை அரசில் அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்ஷே பதவி விலககோரி மக்கள் தொடர் போராட்டங்கங்களில் ஈடுபட்டு வருவதால், இலங்கையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள் ராஜினாமாவை தொடர்ந்து விரைவில் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கை நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து, இலங்கையின் இந்த நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தற்போது உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான பேச்சுக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போர் குறித்து அப்போது பேசிய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் பேச்சு தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தமிழ் மக்கள் கொள்ளப்பட்ட நிலையில, லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இந்த போருக்கு எதிரான தமிழகத்தின் நடிகர் சங்கத்தினர் பலமுறை போராட்டங்களை முன்னேடுத்துள்ளனர். இதில் ஒரு போராட்டத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் கவனம ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் பேசும் ரஜினிகாந்த, இலங்கை மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் சரி, ஏழை மக்கள், பாமரமக்கள், குழந்தைகள் முதியோர் அவர்களின் வேதனை காற்று பட்டாலே அந்த நாடு உருப்படாது.
எந்த நாடாக இருந்தாலும் சாமான்ய மக்களை பாதிக்க கூடாது. எந்த காரணமாக இருந்தாலும் எந்த விதத்திரும் அம்மகக்ள் கஷ்டப்படக்கூடாது. அப்படி ஒரு நாடு இருந்தால் அந்த நாடு உருப்படாது. பெண்கள் உதிரம் கொடுகிறது அந்த பூமியில். அங்கு இருக்கும் பாமர மக்கள் சாகிரார்கள். அவர்களின் பிணங்களை புதைக்கிறார்கள் என்று நனைக்கிறீர்களா அல்ல விதைக்கிறார்கள்.
Thalaivar @rajinikanth Mass speech |@soundaryaarajni |@RIAZtheboss |@OnlineRajiniFC |#Rajinikanth #NonRajiniRecords pic.twitter.com/lqu4dL7Kco
— Official RajiniKanth Network Team© (@RajiniNetwork) March 27, 2022
யுத்தத்தில் நீ அனைவரையும் அழித்தால் கூட அந்த விதை நாளை உங்களை நிம்மதியாக வாழ விடாது புரிந்துகொள்ளுங்கள். நான் என்னுடையது என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு எல்லோர் சொல்வதையும் கேட்டு ஒரு சமரசத்திற்கு வந்து ஒரு முடிவு எடுத்தால் உங்களுக்கு நல்லது என்று பேசியுள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் பேசி இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil