செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு கடை ஊழியரின் கால் அருகே நகர்ந்த போது சுதாரித்துக் கொண்டு தப்பித்த பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சி இணைத்தில் வைரலாகி வருகிறது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்று கடையில் அமர்ந்திருந்தவரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நகரும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேனீர் கடை போன்ற கடைகள் உள்ளன. இந்நிலையில் இன்று மாலை செல்போன் கடைக்குள் புகுந்த சுமார் 5 அடி சாரைப்பாம்பு செல்போன் ரேக் வழியாக நகர்ந்து,
கடையில் அமர்ந்திருந்த பணியாளரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நெளிந்துள்ளது. அப்போது சுதாரித்துக் கொண்ட பணியாளர் பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் ஓடினார். இதையடுத்து அந்த பாம்பு செல்போன் கடைக்குள் இருந்த ஓட்டை வழியாக வெளியே சென்றது.
செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு… பரபரப்பு சிசிடிவி காட்சி#Snake | #Coimbatore | #viralvideo pic.twitter.com/6jMA7uOH4o
— Indian Express Tamil (@IeTamil) May 17, 2023
இந்நிலையில் செல்போன் கடை ரேக் வழியாக பாம்பு நகர்ந்து செல்வதும், கடையின் ஊழியர் அதிர்ச்சியில் ஓடுவதும் போன்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“