New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Covid-Mask.jpg)
Covid 19 Awareness : கொரோனா தொற்று நேரத்தில் மாஸ் அணிவது குறித்து நடிகர் ஒருவ ப்ராங்க் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயாந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. இதில் தமிழக அரசு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறது.
அரசின் இந்த முயற்சிகளுக்கு மதிப்பளித்து மக்கள் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று வருமுன் காப்பதே சிறந்த்து என்ற பழமொழிக்கு ஏற்ப முககவசம், அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், சானிடைசரை பயன்படுத்துததல் போன்ற விதிமுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதில் முக்கியமாக அம்சமாக முக்கவசம் அணிவது பல திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அவசியம் என்பதை போல தற்போதை சூழலில் முககவசம் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை தவறாமல் பின்பற்றினால், கொரோனா பரவுவதை அதிகபட்சம் தடுத்துவிடலாம். ஆனால் இந்த விதிமுகளை பலரும் அலச்சியமாக எடுத்துக்கொண்டு முககவசம்அணிவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் பிரபல பிராங்க் நடிகர் சரித்திரன் வட என்கிற நிகழ்ச்சி மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாஸ்க் அணியாமல் சுற்றி வருபவர்களை பிராங்க் செய்து தெறிக்கவிட்டிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோவை தற்போதைய சூழ்நிலையில, பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.