scorecardresearch

2050-லும் அர்ஜுன் டெண்டுல்கர் வெயிட்டிங்: ட்விட்டரை கலக்கும் மீம்ஸ்

பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில்

Arjun
அர்ஜூன் டெண்டுல்கர் மீம்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அர்ஜூன் டெண்டுல்கர் 2050 ஆண்டும் காத்திருப்போர் பட்டியலில் தான் இருப்பார் என்பது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர்  ஓய்வுலு பெற்றிருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அப்படியேதான் உள்ளது. ஓய்வு பெற்றாலும் ரோடு சேப்டி உள்ளிட்ட தொடர்களில் சச்சின் விளையாடி வருகிறார். இவரது மகன் அர்ஜூன் டெண்டுகல்கர்.

2018-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், இந்திய அளவிலான உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகிறார்.

ஆனால் இதுவரை எந்த தொடரிலும் இவர் களமிறங்கவில்லை. மும்பை அணி இவருக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சச்சின் ரசிகர்களுக்கு இதுவரை ஏமாற்றமே  மிஞ்சியுள்ள நிலையில், 2050ம் ஆண்டுக்கு மேலும் அர்ஜூன் டெண்டுல்கர் காத்திருப்போர் பட்டியலில் தான் இருப்பார் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் தட்ட தொடங்கிவிட்டனர்.

உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த அர்ஜூன் டெண்டுல்கருக்கு போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூர் தொடரில் மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறினார். ரஞ்சிக்கோப்பை தொடரில் கோவா அணிக்காக களமிறங்கிய இவர் பேட்டிங் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.

உள்ளூர் தொடரில் வாய்ப்பு இல்லை என்பதால் அணி மாறிய அர்ஜூனுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு இல்லாமல் மும்பை அணியிலேயே காத்திருப்போர் பட்டியலில் நீடித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil cricket arjun tendulkar stay in mumbai indian after 2050 memes viral

Best of Express