Advertisment

கொரோனாவுடன் மல்லுக்கட்டும் கோலிவுட் 'டான்'கள் - வைரலாகும் அனிமேஷன் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனாவுடன் மல்லுக்கட்டும் கோலிவுட் 'டான்'கள் - வைரலாகும் அனிமேஷன் வீடியோ

Janardhan Kaushik

Advertisment

சமூகவலைத்தளத்தில் ஃபைட் (fight )என்ற பெயரில் ஹீரோக்கள் போராடி கொரோனா வைரஸை துரத்தும் மாதிரியான வீடியோ ஒன்று வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது .

கொரோனாவை மையமாக வைத்து நெட்டிசன் ஒருவர் முன்னணி நடிகர்களின் ஹிட்டான படங்களின் கேரக்டர்களைக் மிகவும் தத்ரூபமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். ரஜினி, ரோபோ பட ஸ்டைலிலும் , தனுஷ் மாறி பட ஸ்டைலிலும் , கார்த்தி கைதி பட ஸ்டைல் என்று அனைத்தையும் கச்சிதமாகவே செய்து உள்ளார்.

அந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமாக சேர்ந்து அனைவரும் கொரோனாவை அழிப்பது மாதிரியான பட அமைப்பு , கை தட்ட வைக்கிறது . இடையில் அவர்கள் பேசும் வசனங்கள் வருவதும் கூடுதல் பலம் தான்.

இந்த வீடியோவை, மதுரையைச் சேர்ந்த 24 வயதான கதிர் குமரன் என்பவர் தான் உருவாக்கியுள்ளார்.

ரஜினியை சந்தித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் - வைரலாகும் வீடியோ

இதுகுறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "உண்மையை சொல்ல வேண்டுமெனில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் அதன் கிளிப்பிங்ஸைப் பார்த்த பிறகு வீடியோ பிரபலமாவது பற்றி நான் அறிந்தேன். எல்லோரும் வீட்டில் இருப்பதால் இந்த வீடியோவை இவ்வளவு பேர் பார்த்திருக்கின்றனர். இந்த கடினமான காலகட்டத்தில் அவர்களை ஏதாவதொரு வழியில் உற்சாகப்படுத்த விரும்பினர். இந்த கடைசி இரண்டு மாதங்களில், நான் சந்தித்த ஒவ்வொரு நபரும் COVID-19 பற்றிபேசினார்கள். உரையாடல் அந்த ஒரு தலைப்பைச் சுற்றியே இருந்தது, எனவே எங்கள் கோலிவுட் நட்சத்திரங்களைக் கொண்ட இந்த பிரபலமான தலைப்பில் ஒரு வீடியோவை ஏன் செய்யக்கூடாது என்று நினைத்தேன். நான் இந்த கான்செப்டில் மே 13 அன்று வேலை செய்யத் தொடங்கி ஜூன் 5 அன்று முடித்தேன்.

“நான் எனது யூடியூப் சேனலை 2016ல் தொடங்கினேன், எனது முதல் வீடியோ நடிகர் தனுஷை கொண்டு ஜி.டி.ஏ கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டது. அவரது படம் ‘மாரி’ வெளியான ஒரு வருடம் கழித்து உருவாக்கப்பட்ட அந்த படைப்பு பரவலாக பாராட்டப்பட்டது. ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்களுடன் ஜி.டி.ஏவில் வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினேன்.

“எனது யூடியூப் பார்வையாளர்களில் 80 சதவீதம் பேர் விளையாட்டுகளை விரும்பும் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள். எனவே ஜி.டி.ஏ அமைப்பில் பல வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். மேலும் WWE, IPL போன்ற பிற தரப்பினரையும் மகிழ்விக்கும் கருத்தாக்கங்களில் வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினேன். மேலும் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலிருந்து பிரபலமான திரைப்பட கதாபாத்திரங்களையும் சேர்த்தேன், இது மற்ற மாநிலங்களிலிருந்து புதிய பார்வையாளர்களைக் கொடுத்தது.

ஆரம்பத்தில், நான் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்களை முடித்து விடுவேன். ஆனால் அதில் தொழில் நேர்த்தி இல்லை. எனவே, கதாபாத்திரத்தின் அமைப்பு, கதாபாத்திரத்தின் முகபாவனைகள், பின்னணி நிறம், இசை போன்றவற்றை மேம்படுத்துவதில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். ஒரு கதாபாத்திரத்தைக் கொண்ட வீடியோவை முடிக்க குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். எனது சமீபத்திய COVID-19 வீடியோ போன்ற பல கேரக்டர்கள் கொண்ட வீடியோ முடிக்க, குறைந்தபட்சம் 10-15 நாட்கள் ஆகும்" என்றும் குமரன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment