scorecardresearch

விராட் கோலி சதம்; காவ்யா மாறன் ரியாக்ஷன்: வைரல் போட்டோஸ்

பெங்களூர் அணி ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

Virat Kaviya
விராட்கோலி – சதம் : காவியா மாறன் ரியாக்ஷன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் விராட்கோலி சதம் அடித்ததை தொடர்ந்து ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரி்க்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட ஐதராபாத் அணி ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கியது.

அதே சமயம், 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி பெற்றிருந்த பெங்களூர் அணி ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. ஹென்ரி க்ளாசன் 104 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து 187 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்க வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட்கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு டூபிளசிஸ் – விராட்கோலி ஜோடி 172 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதில் விராட்கோலி சிக்சர் அடித்ததை கண்டு ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் கொடுத்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத் அணி விளையாடும் போது மைதானத்திற்கு விஜயமாகும் காவியா மாறன் நேற்றும் ஆஜராகி இருந்தார். இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியில் ஹென்ரி க்ளாசன் பவுண்டரி சிக்சர் அடிக்கும்போது கை தட்டி ஆராவாரம் செய்த காவியா மாறன் பெங்களூர் அணி வீரர்கள் பந்தை பவுண்டரிக்கு விரட்டும்போது சற்று சலித்துவிட்டார். அதிலுமத் விராட்கோலியின் ஆட்டம் அவரை கடுப்பேற்றியது என்றே சொல்லாம்.

இதனிடையே விராட்கோலி சதமடித்தபோது காவியா மாறன் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், ஐதராபாத் அணி இந்த ஆண்டும் முன்னேற முடியாமல் போனது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil ipl 2023 virat kohli match century kavya maran reaction