'ஜிலேபிய பிச்சுப் போட்டது போல இருக்கு': த்ரெட் சின்னத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

மெட்டாவின் புதிய செயலி ஏற்கனவே ஒரு நாளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றுள்ளது.

மெட்டாவின் புதிய செயலி ஏற்கனவே ஒரு நாளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
thread app

மெட்டா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள 'த்ரெட்' செயலி வைரலாகி வருகிறது. இந்த முயற்சி எலோன் மஸ்க்கின் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக ஊடகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று இணையத்தில் பரவி வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த இணைய பயன்பாட்டின் லோகோ தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை சுட்டிக்காட்டுவது போல் உள்ளது என்று நெட்டிசன்கள் இடையே பேசப்பட்டு வருகிறது.

,
Advertisment
Advertisements

பல பயனர்கள் இது தமிழ் எழுத்துக்களின் "கு" என்ற எழுத்தில் இருந்து உருவான லோகோ என்று குறிப்பிடுகின்றனர். ஒருசிலர் இது மலையாள எழுத்துக்களான "த்ர்" மற்றும் "க்ரா" போன்றது என்று கூறியுள்ளனர். இருப்பினும், இணையத்தில் உள்ள ஒரு பிரிவினர் இது "ஓம்" என்ற இந்து மதத்தை குறிக்கும் எழுத்து என்று குறிப்பிடுகின்றனர்.

,

ஒருசிலர், இது உணவுப்பொருளாக ஜிலேபி போல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். மெட்டாவின் புதிய செயலி ஏற்கனவே ஒரு நாளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: