Tamil meme latest trending: சென்னை வெள்ளம் முதல் தமிழக சட்டசபை தேர்தல், திரைப்பட வெளியீடுகள், கிரிக்கெட் போட்டிகள், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் வரை என பல்வேறு தலைப்புகளில் தமிழ் மீம்ஸ் பக்கங்கள் அவர்களின் வித்தியாசமான மீம்ஸ்களை பதிவேற்றி வருகின்றனர். இதில் ‘துப்பட்டா போடுங்க டோலி’ போன்ற சில மீம்ஸ் ட்ரெண்டுகள் சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும், சினிமா மற்றும் இசை மீதான மக்களின் காதலைக் கொண்டாடும் ஊடகமாகவே பல மீம்ஸ் டிரெண்டுகள் உள்ளன. இந்த நீண்ட மீம்ஸ் டிரெண்ட் பட்டியலில் சமீபத்திய வருகையாக ‘வைப் மியூசிக்’ மீம்ஸ் ட்ரெண்ட் வந்துள்ளது.
இந்த ‘வைப் மியூசிக்’ மீம்ஸ் ட்ரெண்ட் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி போன்ற அனைவரின் பாடலையும் சேர்த்த ஒன்றாக உள்ளது.

அதில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள சில ‘வைப் மியூசிக்’ மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் உணர்வூட்டும் இசை
இளையராஜா இசையின் குணப்படுத்தும் சக்தி
ஜி.வி.பிரகாஷ் வைப் மியூசிக்
வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் சிங்கர் பிரதீப் குமார் வைப் மியூசிக்
ஆதி – ஹாரிஸ் ஜெயராஜ் ‘வைப் மியூசிக்
கிராஸ்ஓவர் மீம்ஸ்
வைப் மியூசிக் மீமர்ஸ் பற்றிய மீம்ஸ்
சந்தோஷ் நாராயணன் ‘வைப் மியூசிக்’
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்த போது….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“