Advertisment

ஓ.. இவரு தான் புது ஆட்டக்காரரோ?!… இணையத்தை கலக்கும் 'பெட்ரோல், டீசல் விலை உயர்வு' மீம்ஸ்!

Tamil Memes on petrol, diesel price hike goes viral Tamil News: சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Mar 09, 2022 13:12 IST
Tamil memes news: petrol and diesel price hike memes in tamil

petrol and diesel price hike Tamil News: ரஷியா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.808 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 71-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 568-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 56-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 448-க்கும் விற்பனை ஆனது.

Advertisment

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 392 ஆக உயர்ந்து ரூ 40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 49 உயர்ந்து ரூ 5,105க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ1.60 காசு உயர்ந்து ரு77.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த 125-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையான போர் காரணத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் அது பிரதிபலிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.6 உயரும் என்று கூறப்படுகிறது.

இதை கையில் எடுத்துள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மீம்ஸ்களை சமூக வலைதள பக்கங்களில் பறக்கவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

இணையத்தை கலக்கும் 'பெட்ரோல், டீசல் விலை உயர்வு' மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

சர்வதேச மகளிர் தின மீம்ஸ்:

நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அது குறித்த மீம்ஸ்கள் இன்றும் வைரலாகி வருகின்றன.

publive-image
publive-image
publive-image
publive-image

இன்றைய கலக்கல் மீம்ஸ்:

இன்று சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் சில முக்கிய மீம்ஸ்கள்.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Memes #Social Media Viral #Viral #Petrol Diesel Rate #Tamil Memes #Latest Tamil Memes #Trending Tamil Memes Today #Petrol #Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment