/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120729.079.jpg)
Tamil memes news today: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நேற்று பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நேற்று காலை முதல் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் ஆளும் கட்சியான திமுக பெரும்பாண்மையான வாக்குகளை பெற்று இருந்தது. அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தை கைப்பற்றியதோடு, இதற்கு முன் திமுக வெல்லாத வார்டுகளையும் வென்று அக்கட்சியின் உறுப்பினர்கள் புதிய வரலாறு படைத்தனர்.
ஆனால், மற்றொரு முன்னணி கட்சியாக பார்க்கப்படும் அதிகமுகவிற்கு பல இடங்களில் பெருத்த பின்னடைவு தான் மிஞ்சியது. பல இடங்களில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்தனர். இதேபோல், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமான் ஒருங்கிணைத்து வரும் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் பெரும் இடியாக அமைத்துள்ளது.
இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதாக மார் தட்டிக்கொள்ளும் பாஜக 5வது இடத்தை தான் பிடித்துள்ளது. முந்தைய தேர்தலில் ஒரு வார்டில் மட்டும் ஒரு வாக்கு பெற்று இருந்த அக்கட்சி, இம்முறை 2 இடங்களில் ஒரு வாக்கு மற்றும் ஒரு இடத்தில் பூஜ்ஜிய வாக்கு என பெற்று அதன் சாதனையை அக்கட்சியே முறியடித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-23-at-12.26.45-PM.png)
தேர்தல் மீம்ஸ்:
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை ருசித்த வேட்பாளர்கள் தங்களின் வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பறக்கவிட்டு வருகின்றனர். வார்டு வேட்பாளரை மையமாக வைத்து வலம் வரும் இந்த மீம்ஸ் இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகின்றன.
அனல் பறக்கும் கவுன்சிலர் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120718.625.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T112925.922.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T112936.031.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T112956.456.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113005.995.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113044.900.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113200.003.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113500.143.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113508.632.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113516.610.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113524.638.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120542.052.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120550.497.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120600.498.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120611.140.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-23-at-12.28.01-PM.png)
கலக்கல் மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113057.677.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113210.012.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113220.577.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113229.554.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113237.908.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113450.967.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T113532.561.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120621.103.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120639.612.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120650.917.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-23T120657.702.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.