Tamil memes news: சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை அனைத்து தரப்பினரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#WomensDay2022 || சர்வதேச மகளிர் தினம் இன்று…!https://t.co/gkgoZMIuaK | #WomensDay | #WomensDay2022 | #மகளிர்தினம் pic.twitter.com/dlMzw9EsrG
— Indian Express Tamil (@IeTamil) March 8, 2022
அவ்வகையில் மீம்ஸ் கிரியேட்டர்களும் தங்களின் வித்தியாசமான மீம்ஸ்களை பதிவிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
சிறப்பு டூடுல் வெளியிட்டு மரியாதை செய்த கூகுளை கலாய்த்து மீம்ஸ்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. மேலும், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் பற்றிய அனிமேஷன் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
இதை குறிப்பிட்டு ஏன் ஆண்கள் தினத்தன்று சிறப்பு ‘டூடுல்’ போடவில்லை என்று கூறி மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.



பெண் என்பவள் மீம்ஸ்:
பெண் என்பவள் யார்? என்கிற கவிதையுடன் வந்து சில ஆண் நண்பர்கள் தொல்லை கொடுப்பார்கள் தோழி என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.






மகளிர்தின கலக்கல் மீம்ஸ்:



மகளிர் தின கலக்கல் மீம்ஸ்:




“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“