Advertisment

அப்துல் கலாம்... இளையராஜா... அடுத்து மாரடோனா! பிரமாண்ட கேக் மரியாதை

'கால்பந்து உலகின் கடவுள்' என வர்ணனை செய்யப்படும் டியாகோ மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரமாண்ட கேக்கை வடிவமைத்து உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu bakery pays tribute to Diego Maradona with life-sized cake - அப்துல் கலாம்... இளையராஜா... அடுத்து மாரடோனா!பிரமாண்ட கேக் மரியாதை

ராமநாதபுரத்தை சேர்ந்த பேக்கரி ஒன்று, சமீபத்தில் மறைந்த கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவின் உருவ வடிவில் பிரமாண்ட கேக் செய்துள்ளனர். இதை 'கால்பந்து உலகின் கடவுள்' என வர்ணனை செய்யப்படும் டியாகோ மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வடிவமைத்து உள்ளதாக கூறியுள்ளனர். இந்த புகைபடம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த பிரமாண்ட கேக் செய்வதற்கு 270 முட்டைகளும், 60 கிலோ சர்க்கரையும் பயன்படுத்தியுள்ளனர்.

Advertisment

"கால்பந்து உலகின் கடவுள் டியாகோ மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இளைஞர்கள் விளையட்டுகளில் ஆர்வமுடன் பங்கு கொள்ள ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த பிரமாண்ட கேக்கை வடிவமைத்துள்ளோம் " என அந்த பேக்கரியில் வேலை செய்யும் சதீஸ் ரெங்கநாதன் கூறினார்.

இதற்காக பேக்கரியை பலர் வெகுவாக பாராட்டினாலும் சிலர் அந்த சிலை மாரடோனா வடிவில் இல்லை என சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.

 

 

இந்த பேக்கரி தான் இதற்கு முன்னதாக, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் இசைஞானி இளைய ராஜா ஆகியோரின் உருவ கேக் செய்தது குறிப்பிட தக்கது.

டியாகோ மாரடோனா, அர்ஜெண்டினா அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர். அந்த அணிக்காக உலக கோப்பையை பெற்று தந்தவர். கடந்த நவம்பர் 25-ல் மாரடைப்பால் இறந்தார்.

Social Media Viral Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment