scorecardresearch

இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் திருமண வரவேற்பு… கலக்கும் தமிழ்நாடு ஜோடி

மணப்பெண்ணின் தந்தை கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதனால், தினேஷ் அவரது டிஜிட்டல் அவதாரத்தை வரவேற்பு நிகழ்வில் வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியில் பிப்ரவரி மாதம் சிவலிங்கபுரம் கிராமத்தில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தினேஷ் மற்றும் ஜனகநந்தினி ஜோடி, தங்களது திருமண வரவேற்பை Hogwarts தீமில் மெட்டாவேர்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இணையம் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய தினேஷ், ” நாட்டிலேயே மெட்டாவெர்ஸில் திருமணம் செய்து கொள்ளும் முதல் ஜோடி நாங்கள்தான். கடந்த ஒரு வருடமாக பிளாக்செயினில் பணிபுரிந்து வருகிறேன். அதனால் எனக்கு அதில் அனுபவம் அதிகம். கிரிப்டோ பற்றி அதிகம் தெரியும். மெட்டாவெர்ஸ் என்பது பிளாக்செயினில் செயல்படும் ஒரு தொழில்நுட்பம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஒருநாள், யூடியூபில் மெட்டாவேர்ஸ் குறித்து ஒரு வீடியோவைப் பார்த்தேன்.அப்போது தான், மெட்டாவேர்ஸில் ஏன் ஒரு நிகழ்வைச் செய்ய முடியாது என்று நினைத்தேன்? இப்போது, மைக்ரோசாப்ட், பேஸ்புக் மற்றும் பல நிறுவனங்கள் மெட்டாவேர்ஸில் முதலீடு செய்கின்றன.

எனவே ஒரு நிகழ்வை நடத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைவரும் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள் என நினைத்ததாக கூறினார். ​​​​தினேஷ் ஐஐடி மெட்ராஸில் திட்ட உதவியாளராக பணிபுரிகிறார்.

மணப்பெண்ணின் தந்தை கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதனால், தினேஷ் அவரது டிஜிட்டல் அவதாரத்தை வரவேற்பறையில் வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ” கடந்த ஏப்ரலில் எனது காதலியின் தந்தை இறந்துவிட்டார். இந்த யோசனை மூலம், அவரை ஆச்சரியப்படுத்த இருக்கிறேன். நிகழ்வில் அவரை ஒரு அங்கமாக மாற்றிட திட்டமிட்டுள்ளேன். அவர் ஒரு 3D அவதாரமாக இருந்து, மெட்டாவெர்ஸில் எங்களை ஆசீர்வதிப்பார். அதுதான் நான் அவளுக்கு கொடுக்கக்கூடிய பரிசு” என்றார்.

Hogwarts தீம் பூரிப்பில் உள்ள ஜனகநந்தினி பேசுகையில், “மெட்டாவர்ஸ் நிகழ்வு குறித்து அவர் விளக்கியபோது, எனக்கு புரியவில்லை. எனக்கு இது புதிதாக இருந்தது. இது சாத்தியமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. இதை ஏன் கிராமத்தில் நடத்தக்கூடாது என்று கேட்டேன். இது பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டாலும், மக்கள் எப்படி இணைவர்கள், ஆடைகள் எப்படி உடுத்திருப்பார்கள் போன்ற பல்வேறு கேள்விகள் உள்ளன. இதுவரை, நான் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. வெற்றியடையும் என்று நம்புகிறேன். ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார். ஜனகநந்தினி டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

விக்னேஷ் செல்வராஜ் தலைமையிலான சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம், டார்டிவெர்ஸ், மெட்டாவேர்ஸ் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இது பாலிகோன் டெக்னாலஜி பிளாக்செயின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திட முடித்திட, செல்வராஜை தினேஷ அணுகியுள்ளார்.

டார்டிவெர்ஸ் சிஇஓ செல்வராஜ் கூறுகையில், “மக்கள் இணையதளம் மூலம் லாகின் செய்வார்கள். அவர்கள் தங்கள் அவதாரத்தை தேர்வு செய்துகொள்ளலாம். தம்பதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அவதாரங்கள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன.

தம்பதிகளின் வீடியோ ஸ்டீரிமிங் திருமண வரவேற்பின்போது, விருந்தினர்கள் இணையம் வாயிலாக அவர்களுடன் உரையாடலாம். தம்பதி விருப்பத்தின் பேரில் தான், ஹாரி பாட்டர் தீம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. யாராவது இந்திய முறையில் நிகழ்வை நடத்த வேண்டும் என விருப்பினாலும், நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்.

தொழில்நுட்பம் குறித்த போதிய புரிதல் இல்லாதவர்களுக்காக, ஜனவரி 25ஆம் தேதி டெமோ காட்சி நடத்தப்படும். இது திருமண வரவேற்பு தினத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஒருவர் டெஸ்க்டாப், லேப்டாப் அல்லது டேப்லெட் மூலம் லாகின் செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். மெட்டாவர்ஸ் திருமண வரவேற்பு வைரலான பிறகு, எங்களுக்கு நிறைய முன்மொழிவுகள் வருகின்றன. வரவிருக்கும் காதலர் தினத்தில் ஒரு நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மெட்டாவர்ஸ் என்பது மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) உலகமாகும். அதனை பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அவதாரங்கள் மூலம் வாழவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மெய்நிகர் திருமண விழாவை நடத்திய உலகின் முதல் ஜோடி புளோரிடா ஜோடி ட்ரேசி மற்றும் டேவ் காக்னன் ஆகும்.

மெட்டாவெர்ஸில் நடந்த திருமணத்திற்காக, டேவ் மற்றும் ட்ராசி காக்னன் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நிஜ விழாவில் அணிந்திருந்த ஆடைகள் அடிப்படையில் அவதார் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ட்ரேசி மற்றும் டேவ் காக்னனின் டிஜிட்டல் அவதாரங்கள், வேலை, கற்றல் மற்றும் நிகழ்வுகளுக்கான மெய்நிகர் சூழல்களை உருவாக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விர்பெலா நிறுவனத்தால் இந்த விழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu couple to host india first wedding reception in metaverse