scorecardresearch

தமிழக மீனவர் வலையில் சிக்கிய டால்பின்: வைரல் வீடியோ

தென்னிந்தியாவின் கரையோரங்களில் அடிக்கடி காணப்படும் இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் டால்பின், மீனவர்களின் வலைக்குள் சிக்கியது. இதனது வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

தமிழக மீனவர் வலையில் சிக்கிய டால்பின்: வைரல் வீடியோ
மீன்பிடிக்கும் வலையிலிருந்து டால்பின் விடுவிக்கப்பட்டவுடன், மீனவர்கள் மற்றும் வன ஊழியர்கள் டால்பினை கடலுக்குள் அனுப்பி விடுகின்றனர்.

தென்னிந்தியாவின் கரையோரங்களில் அடிக்கடி காணப்படும் இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் டால்பின், மீனவர்களின் வலைக்குள் சிக்கியது. இதனது வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிக்கும் வலையில் சிக்கிய டால்பினை உள்ளூர் மீனவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விடுவித்தனர். மீட்பு வீடியோவை இந்திய நிர்வாக சேவை அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நீர்வாழ் பாலூட்டிகளின் உயிரைக் காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீனவர்களின் கூட்டு முயற்சியை அவர் பாராட்டி பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற கூடுதல் செயலாளர் சாஹு ட்வீட் செய்ததாவது, “தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ரேஞ்ச் ஏர்வாடி பீட்டில் நேற்று வன ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து டால்பினை மீட்டனர். இந்த அற்புதமான செயலுக்கு அனைத்து உள்ளூர் மீனவர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள வன ஊழியர்களுக்கு நன்றி 👍 👏 #TNForest.”

இந்தச்செயலுக்கு நெட்டிசன்கள் கூறியதாவது, “சிறந்த பணி அதிகாரிகள் மற்றும் காவலர்கள்.”, “சமூக பங்கேற்புடன் உயிரினங்களை காப்பாற்றுவது இங்கே நன்றாக வேலை செய்கிறது மேடம்… உண்மையில் வனத்துறைக்கு பாராட்டு… மாநிலத்தில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும் இதையே முயற்சிக்க வேண்டும்..”

தென்னிந்தியாவின் கரையோரங்களில் அடிக்கடி காணப்படும் இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் டால்பின், மீனவர்களின் வலைக்குள் சிக்கியது. இந்த இனங்கள் 150 முதல் 200 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu forest staff release dolphin caught in fishing net

Best of Express