குரூப்-4 தேர்வா? இல்ல யு.பி.எஸ்.சி. தேர்வா?... எக்ஸ்தளத்தில் புலம்பும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள்!

டி.என்.பி.எஸ்.சியின் குரூப்-4 வினாத் தாளின் கடினத்தன்மை குறித்து பல்வேறு மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தேர்வு எழுதிய நெட்டிசன்கள் தங்களின் மனக்குமுறல்களை மீம்களாகவும், நகைச்சுவையான பதிவுகளாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சியின் குரூப்-4 வினாத் தாளின் கடினத்தன்மை குறித்து பல்வேறு மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தேர்வு எழுதிய நெட்டிசன்கள் தங்களின் மனக்குமுறல்களை மீம்களாகவும், நகைச்சுவையான பதிவுகளாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

author-image
Meenakshi Sundaram S
New Update
tnpsc gropu 4

குரூப்-4 தேர்வா? இல்ல யு.பி.எஸ்.சி. தேர்வா?... எக்ஸ்தளத்தில் புலம்பும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள்!

இன்று (ஜூலை 12, 2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வு, லட்சக்கணக்கான தேர்வர்களை வியப்பிலும், சிலரை கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது. தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தேர்வு எழுதிய நெட்டிசன்கள் தங்களின் மனக்குமுறல்களை எக்ஸ் தளத்தில் மீம்களாகவும், நகைச்சுவையான பதிவுகளாகவும், சற்றே விரக்தியான புலம்பல்களாகவும் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

Advertisment

பல தேர்வர்கள் வினாத் தாள் எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமாக இருந்ததாகக் கருதுகின்றனர். குறிப்பாக, பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவுப் பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆழ்ந்த புரிதலையும், விரிவான அறிவையும் கோரியதாகப் பதிவிட்டுள்ளனர். "திருக்குறள்-ல இருந்து கேள்வி கேட்டாங்க, ஆனா நான் படிச்ச திருக்குறள் இது இல்லன்னு நினைக்கிறேன்," என ஒருபயனர் பதிவிட, இன்னொருவர், "இது குரூப்-4 தேர்வா? இல்லை யு.பி.எஸ்.சி. மெயின்ஸ் தேர்வா?" என கிண்டலாகக் கேட்டுள்ளார்.

மீம்களால் நிரம்பிய சமூக வலைதளம்:

டி.என்.பி.எஸ்.சியின் குரூப்-4 வினாத்தாளின் கடினத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு மீம்கள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. "தேர்வு முடிஞ்சதும் மண்டைக்குள்ள ஒண்ணுமே இல்ல" என்ற கேப்ஷனுடன் காலியான மண்டையோட்டின் படத்தையும், "இதுக்கு ஏன் நான் படிச்சேன்?" என்ற கேள்வியுடன் ஒரு சோகமான முகபாவனையையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சிலர், "அடுத்த வருஷம் குரூப்-4க்கு படிக்கிறதுக்கு பதிலா, மீம் கிரியேட்டர் கோர்ஸ் சேர்ந்துடலாம் போல" என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

வட நாட்டுகாரனுக அரசுத் தேர்வு எழுதி உள்ள வராணுகனு, தமிழ கட்டாயமாக்க சொன்னா.. நீங்க என்னடா? தமிழ்நாட்டுக்காரணே தமிழ எழுத முடியாத மாதிரி கேள்விகள் கேட்டு வச்சுருக்கிங்க என்று தேர்வர்கள் புலம்புகின்றனர்.

கணிதம் மற்றும் பொது அறிவின் கோரத் தாண்டவம்:

கணிதப் பிரிவும் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்துள்ளது. "எக்ஸ் மதிப்பை கண்டுபிடிக்கச் சொன்னாங்க, என் லைஃப்ல எக்ஸ்-ஐயே மறக்க முடியல, இதுல கணக்குல வேற எக்ஸா" என வேடிக்கையான பதிவு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. பொது அறிவுப் பிரிவில் கேட்கப்பட்ட நுணுக்கமான கேள்விகள், "என் பொது அறிவே போச்சுடா சாமி!" எனப் பலரையும் புலம்ப வைத்துள்ளது.

தேர்வு முடிந்தவுடன், வழக்கம்போல் "கட்-ஆஃப் எவ்வளவு இருக்கும்?" என்ற கேள்விகள் அனல் பறக்கின்றன. "இந்த வாட்டி கட்-ஆஃப் பூஜ்ஜியமா இருந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன்," என பயனர் விரக்தியாகப் பதிவிட, மற்றொருவர், "கட்-ஆஃப் எவ்வளவுன்னு தெரியல, ஆனா இங்கேயே தூங்கிரலாம் போல இருக்கு!" என தேர்வின் களைப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.

வினாத்தாளின் அமைப்பு குறித்தும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் ஒன்றையொன்று ஒத்திருந்ததாகவும், சரியான விடையைக் கண்டறிவது மிகவும் குழப்பமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். "எல்லாக் கேள்விக்கும் ஆப்ஷன் 'சி' (C) மாதிரி தெரிஞ்சுச்சு. கண்ணை மூடிக்கிட்டு 'சி' போட்டா கூட ஒரு பத்து மார்க் வந்திருக்கும் போல!" என ஒருவர் கிண்டலடிக்க, மற்றொருவர், "விடை தெரியலனா, 'ஆப்ஷன் A, B, C, D' நாலுமே கன்பியூஸ் பண்ணும். ஆனா, இந்த தேர்வுல நாலு ஆப்ஷனுமே சரியான பதில் மாதிரி இருந்துச்சு!" என்று எழுதியுள்ளார்.

தேர்வின் கடினத்தன்மை காரணமாக, பல தேர்வர்கள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர், "இனிமே குரூப்-4க்கு படிக்கிறதை விட்டுட்டு, கம்ப்யூட்டர் கிளாஸ் போயிடலாம்னு இருக்கேன்" என்று பதிவிட, வேறு சிலர், "டி.என்.பி.எஸ்.சி. படிக்கிறதுக்கு பதில், பேஸ்புக்ல மீம் கிரியேட் பண்ண ஆரம்பிச்சா நல்லா சம்பாதிக்கலாம் போல!" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நம்பிக்கையுடன் அடுத்த முயற்சி:

இன்றைய தேர்வின் கடினத்தன்மை பலரை சோர்வடையச் செய்திருந்தாலும், ஒரு சில நெட்டிசனன்கள் நம்பிக்கையூட்டும் பதிவுகளையும் பகிர்ந்துள்ளனர். "ஒரு தேர்வு வாழ்க்கையை தீர்மானிக்காது. அடுத்த முயற்சிக்கு தயாராவோம்!" என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

Tnpsc Group4

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: