தமிழைப் போல இந்தியும் பிராந்திய மொழியே – டிவி விவாதத்தில் பட்டைய கிளப்பிய ஞாநி : வைரலாகும் வீடியோ

Gnani viral video : இந்தி திணிப்பிற்கு எதிராக திண்ணமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த ஞாநியின் இந்த விவாதப்பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Tamil nadu, Hidi imposition, Gnani, journalist Gnani, tv debate, ndtv, big fight, video, viral, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை குறித்த விவாதமும், அதனைத் தொடர்ந்து அரங்கேறிவரும் நிகழ்வுகளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும்நிலையில், சமீபத்தில் காலமான பத்திரிகையாளர் ஞாநி, ஆங்கில ஊடகம் ஒன்றில் பங்கேற்ற வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சி பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தில் இந்தி மொழி குறித்த கேள்வி இடம்பெற்றிருந்த நிலையில், அரசு பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழில் இருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அங்கு இந்தி மொழிப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு போட்டோ வைரலாக பரவியது.

தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் பிராந்திய மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி. இந்தி திணிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேச அப்படியானால் நானும் தமிழில் பேசுவேன் என்று தைரியமாக சொன்னவர் ஞாநி.

2015-ம் ஆண்டில், முன்னணி ஆங்கில ஊடகமான என்.டி.டிவியின் பிரபல விவாத நிகழ்ச்சியான ‘பிக் ஃபைட்’ நிகழ்ச்சியில் இந்தியை நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பது குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் இந்தி மொழியின் பெருமை குறித்து பேச வந்த பெண் பேச்சாளர் இந்தி மொழியில் விவாதத்தில் பேச, அவர் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தவர் ஞாநி.
இது ஆங்கில நிகழ்ச்சி உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியும் போது ஏன் இந்தியில் பேசுகிறீர்கள் என்று ஞாநி அந்த பெண் பேச்சாளரிடம் கேட்டார். நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியவரும் பெண் பேச்சாளரை ஆங்கிலத்தில் பேச வலியுறுத்த அதை மறுத்த அந்த பெண் தொடர்ந்து இந்தியிலேயே பேசினார்.

இதனால் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்த ஞாநி, அவர் இந்தியில் பேசினால் தானும் தமிழில் பேசுவேன் என்று தமிழில் பேசினார். ஞாநியின் வாதம் சரியே என்று மற்றொரு பேச்சாளர் தன்னுடைய தாய்மொழியான தெலுங்கில் பேசத் தொடங்கினார். தமிழகம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி வருவதாக கூறினார். இந்தி திணிப்பை மட்டுமே தமிழகம் எதிர்ப்பதாகவும் மாற்று மொழியாக அதனை கற்க எந்தத் தடையும் இல்லை என்ற நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது என்பதையும் ஞாநி பதிவு செய்தார்.

வைரலாகும் வீடியோ : இந்தி திணிப்பிற்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த ஞாநியின் இந்த விவாதப்பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. . ஞாநியின் வாழ்க்கைப் பயணத்தில் இந்த விவாத நிகழ்ச்சி ஒரு முக்கியமான குறிப்பிடும்படியான விவாதமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu hidi imposition gnani journalist gnani tv debate ndtv big fight video viral

Next Story
கடலாக மாறிய டெல்லி: கால் டாக்ஸிக்கு பதிலாக ‘போட் சர்வீஸ்’ விடுவார்களா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express