வைரல் வீடியோ : தாண்டியா ஆட்டம் ஆடி வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ...

செல்லூர் ராஜூ என்றாலே அனைவருக்கும் காரணமே இல்லாமல் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.

Tamil Nadu Minister Sellur Raju Danced Dandiya : நாளுக்கு நாள் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் துவங்கினாலும், திருவிழா போல் களைகட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.  செல்லூர் ராஜூ என்றாலே அனைவருக்கும் காரணமே இல்லாமல் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.

Tamil Nadu Minister Sellur Raju Danced Dandiya – Video

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியனுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக மதுரை கீழவாசல் சென்றார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

அங்கு வாழ்ந்து வரும் வட நாட்டவர்களான ராஜஸ்தானியர்கள் மற்றும் மராட்டியர்கள், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலகலமாக தாண்டியா நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் சந்தோசத்தில் பங்கேற்ற செல்லூர் ராஜூவும், வேட்பாளர் ராஜ் சத்தியனும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள். தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோ.

இன்று தேர்தல் களங்களில் நடைபெறும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ள

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close