/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-Illution0.jpg)
ஆப்டிக்கல் இல்யூஷன்
Optical illusion game: ஒரு ஓவியம் அல்லது புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்களை கண்டுபடிக்க தனி திறமை வேண்டும். கூர்மையான கண் பார்வைக்கு சவால் விடும் இந்த மாதிரியான புகைப்படங்களை ஆப்டிக்கல் இல்யூஷன் என்று சொல்வார்கள். சமீப காலமாக இந்த மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவதும் நெட்டிசன்கள் பலரும் இதை தேடி தேடி அதில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பது தொடர்ந்து வருகிறது.
மனித மூளையின் காட்சி அமைப்பை குழப்பும் வகையிலான இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் போன்ற புகைப்படங்கள், வடிவங்கள் அல்லது வண்ணங்களைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. சில புகைப்படங்கள் எடுக்கும்போது எதேர்ச்சையாக சிக்கிய இல்யூஷன் போலவும் இருக்கிறது. இத்தனைய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அதிகம் உலவி வருகிறது.
அந்த வகையில் உங்கள் கூர்மையான கண் பார்வைக்கு சவால் விடும் வகையிலான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண படுக்கை அறையில் உள்ள படுக்கை புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் நாயை 11 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-Illution2.jpg)
இந்த படத்தில் மிகவும் எளிமையானது, கருப்பு தலையணியுடன் ஒரு படுக்கை உள்ளது. இந்த படுக்கையில் நாய் ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது. நாய்கள் 2 வயது குழந்தையைப் போலவே புத்திசாலிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை அதனால்தான் இந்த நாய் கண்ணாமூச்சி விளையாட முயல்கிறதோ என்ற ஆச்சரியம் அனைவருக்குள்ளும் ஏற்படுத்தும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
இந்த நாயை கண்டுபிடிக்க நீங்கள் முற்சித்தீர்களா? சரி இந்த புகைப்படத்தை நன்றாக உற்று பாருங்கள். அதில் தலையணைக்கு மேல் நாயின் மூக்கு உங்களுக்கு தெரிகிறதா? அப்படி உங்களால் நாயைக் கண்டுபிடிக்க முடிந்திருந்தால் வாழ்த்துக்கள்! நீங்கள் 11 வினாடிகள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் நாயைக் கண்டுபிடித்தால், உங்களுக்கு சிறந்த கண்காணிப்பு திறன் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-Illution.jpg)
நாய் உருமறைப்பு சிறியதாக இருந்தாலும் உங்களால் பார்க்க முடிந்தது. அதே சமயம் நீங்கள் நாயைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களின் கண்காணிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் மூளைக்கு சவால் விடுவதற்கும் உங்கள் காட்சி உணர்வை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் திறமைகளை முயற்சி செய்து கொண்டே இருங்கள், நீங்கள் ஒரு உண்மையான புதிர் மாஸ்டராக உருவாக வாழ்த்துக்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.