ஒரு புகைப்படத்தை ஒரு கோணத்தில் பாக்கும்போது ஒரு படமாகவும், அதே மற்றொரு கோணத்தில் பாக்கும்போது வேறு விதமாகவும் இருக்கும் புகைப்படங்களுக்கு ஆப்டிக்கல் இல்யூஷன் என்று பெயர். சமீப காலமாக இந்த மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்க்கவும் தவறவில்லை.
Advertisment
மேலும் இந்த மாதிரியான பார்வைத்திறன் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இதன் மூலம் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் மனித உணர்வின் சிக்கலையும் எளிதாக கையாள முடியும் என்பதையும் நிரூபிக்கின்றன. நீங்கள் இந்த மாதிரியான ஆப்டிக்கல் இல்யூஷன் வகை புகைப்படங்கள் மீது ஆர்வம் உள்ளவராக இருந்தால் இந்த புகைப்படத்தை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த புகைப்படத்தில் சிங்கத்தின் தலை பிடறியுடன் அமைந்துள்ளது. ஆனால் இந்த உருவத்தில் ஒரு எலி ஒளிந்துள்ளது. அதை 5 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான் உங்கள் நேரம் தொடங்கிவிட்டது. உங்கள் கண் பார்வைத்திறனை பற்றிய எளிய சோதனை தான் என்றாலும் இதற்கு சிறிது மூளையையும் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம்.
இப்போது இந்த படத்தில் ஒளிந்திருக்கும் எலியை நீங்கள் கண்டுபிடித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் கில்லாடி தான் மாறாக உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை சிங்கத்தின் படத்தை தலைகீழாக திருப்பி பாருங்கள். படத்தில் ஒளிந்திருக்கும் எலி உங்களுக்கு தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“