பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்ததால் உலக அளவில் சர்ச்சையானது.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது என்று தெரிவித்ததோடு, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்து அறிவித்தது. மேலும், பாகிஸ்தான் தூண்டுதலால்தான் இந்தியாவுக்கு எதிரான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீணியாகி உள்ளது.
அதே போல, மாநில அரசியலில், பாஜக காக்கா கூட்டம் என்று செல்லூர் ராஜு விமர்சித்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்னையன், செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் யாரும் எதிர்வினையாற்றத் தேவையில்லை என்று கட்சியினருக்கு அற்வுறுத்தியுள்ளார். இந்த விவகாரமும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கவனத்தைப் பெற்று மீம்ஸ் கணைகளைத் தொடுக்க காரணமாகியுள்ளது.
அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் வேகமாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களால் இன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட அரசியல் மீம்ஸ்களில் கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர் இன்று மீம்ஸ் மழையாக பொழிந்திருக்கிறார். அவருடைய பதில் கூறியிருப்பதாவது: “அரபி பொருட்கள புறக்கணிப்போம்னும் சொல்ல முடியாம, ௭ந்தெந்த அரபி App இருக்கு, அதையெல்லாம் ௭ப்டி uninstall பண்றதுண்ணும் புரியாம உன் முன்னாடி நடை பிணமா நிக்கிறேன் சிம்ரன்..” என்று கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், “அன்புள்ள அரபிகளுக்கு சங்கிகள் நாங்கள் ௭ழுதும் மடல்
அல்ல மன்னிப்புக் கடிதம்…” என்று கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் இன்னொரு மீம்ஸில், விவேக் குரலில், “ஹலோ… அரபிக்குத்து பாட்டு எழுதுன சிவகார்த்திகேயனா? அரபில மன்னிப்பு கடிதம் எப்படி எழுதணும்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்று கலாய்த்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில், ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் படங்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், நமது மீம்ஸ் கிரியேட்டர்கள் விடவில்லை, ரிசர்வ் வங்கியை விமர்சித்துள்ளார்கள்.
கட்டனூர் சேக் தனது ட்விட்டர் பக்கத்தில், செல்லூர் ராஜு பாஜக ஒரு காக்கா கூட்டம் என்று விமர்சித்ததைக் குற்ப்பிட்டு, “பாஜக ஒரு காக்கா கூட்டம் - செல்லூர் ராஜூ
காக்காவெல்லாம் நம் முன்னோர்கள், பித்ருக்கள்... சாஸ்திரத்த பழிக்காதடா சண்டாலா… மூமெண்ட்…” என்று கலாய்த்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், “திமுக அரசை ஆட்சியில் இருந்து கீழே இறக்கும் வரை வேகம் குறையக் கூடாது” என்று கூறியது குறித்து, மயக்குநன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “திமுக அரசை ஆட்சியில் இருந்து கீழே இறக்கும் வரை வேகம் குறையக் கூடாது!- ஓபிஎஸ். பன்னீர் சோடா பயங்கரமா பொங்குற மாதிரி தெரியுதே..?” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “தேர்தலில் தனித்தே போட்டி என்று அதிமுக சொல்லத் தயார், தமிழகத்தில் மற்ற கட்சிகள் சொல்லத் தயாரா?” என்று செல்லூர் ராஜு கேட்டதற்கு, “அது இருக்கட்டும்… 'ஒற்றைத் தலைமை'னு அதிமுக சொல்லத் தயாரா..?!” என்று எதிர் கேள்வி கேட்டு கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
அதே போல, “பாஜகவை பொறுத்தவரையில் அவர்களைக் 'கண்டிக்க' எங்களுக்கு உரிமை இல்லை” என்று பொன்னையன் கூறியதற்கு, “தேர்தல் நேரத்தில் அவங்களை 'கட்டிக்க' மட்டும் உரிமை இருக்கும் போல..?!” என்று மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
மயக்குநன் மற்றொரு மீம்ஸில், “மாநில அரசுகளை பொம்மைகளாக நடத்தும் போக்கில் பாஜக அரசு ஈடுபடுகிறது” என்று பொன்னையன் கூறியதற்கு, “அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதானே..?!” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
“சசிகலா- டிடிவி தினகரனிடம் தொண்டர்கள் இல்லை” என்று பொன்னையன் கூறியதற்கு, “ஸ்லீப்பர் செல்ஸ்' மட்டும்தான் இருக்காங்களா சார்..?!” என்று மயக்குநன் மீம்ஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
நபிகள் குறித்து சர்ச்சைக் கருத்து காரணமாக, பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து, நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “ச்சே…உலகமாடா….இது…!!! # பாஜக செய்தி தொடர்பாளர்கள்…!!!” என்று கைப்புள்ள வடிவேலு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி மற்றொரு மீம்ஸில், “பாஜக பற்றி நான் பேசியது என்னுடைய சொந்த கருத்துதான்; கட்சி கருத்து இல்லை” என்று பொன்னையன் கூறியது குறித்து, படையப்பா படத்தில் மாப்பிள்ளை இவருதான் ஆனால், அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது இல்லை” என்ற மீம்ஸ்போட்டு, “பாஜக பற்றி நான் பேசியது என்னுடைய சொந்த கருத்துதான்;
கட்சி கருத்து இல்லை” என்று பொன்னையன் கூறியதைக் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.
சரவணன். M என்ற ட்விட்டர் பயனர், “ஊழலை தட்டிக் கேட்கும் ஒரே கட்சி பாஜக” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, “இல்லையா பின்னே.. 17 ஸ்டேட்ல வேற ஆட்சியில் இருக்கீங்க…!?” என்று மீம்ஸ் மூலம் கேட்டுள்ளார்.
சரவணன். M மற்றொரு மீம்ஸில், “அதான் மன்னிப்பு கேட்டுட்டோம் இல்ல.. சும்மா சும்மா அதையே பேசிக்கிட்டு இருந்தா அமைதியா இருக்க மாட்டேன்… ~ என்ன பண்ணுவே..!? ~ மறுபடியும் மன்னிப்பு கேட்டுடுவேன்…” கிண்டல் செய்துள்ளார்.
சரவணன். M இன்னொரு மீம்ஸில், “பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. என்ன திடீர்னு..? அது ரொம்ப நாளாவே இருக்கு… நாங்க தான் காட்டிக்கல…” பாஜகவை கிண்டல் செய்துள்ளார்.
ஜோ என்ற ட்விட்டர் பயனர், “சங்கீஸ் ~ பிரச்சனை ஆனது "அரபி முஸ்லீம்" கூடங்கிறதால தான் பணிஞ்சு போறோம்.
இதுவே உள்ளூர் முஸ்லீமா இருந்தா ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி உக்கிரமா களமாடிருப்போம்.” என்று கிண்டல் செய்துள்ளார்.
சரவணன். M ஒரு மீம்ஸில் அண்ணாமலையையும் சீமானையும் ஒன்றாக கிண்டல் செய்துள்ளார். “மோடியால்தான் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யமுடியுமென சீமானுக்கு தெரியும்” என்று அண்ணாமலை கூறியதற்கு, “ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தெரியாம இருக்குமா.. என்ன..!?” என்று கிண்டல் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.