அரசியல் கட்சிகள் ஆதரவு நெட்டிசன்களும் பொதுவான நெட்டிசன்களும் பரபரப்பாக உள்ளனர். சமூக ஊடகங்களில் மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதே போல, வாரணாசியில் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அது சிவலிங்கம் இல்லை என்ற செய்தியும் இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கான ஆதார செய்தியாகி உள்ளது.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், க்யான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை கம்மெண்ட் அடித்து, “ஜீ உங்க வீட்டை ஆய்வு செஞ்சப்போ, உங்க வீட்டுக்கு பின்புறம் ஒரு சிவலிங்கம் கிடைச்சது. அது பழைய அம்மி கல்லுடா! கிரைண்டர் வந்ததுக்கு அப்புறம், எங்கம்மா அதை பயன்படுத்தவே இல்லை. நீ அதை பயன்படுத்தி என் வீட்டை இடிச்சிறாத… வை போனை” என்று கிண்டல் அடித்துள்ளார்.
இலங்கை அரசு விமான சேவையை தனியார் மயமாக்கியது குறித்து மோகன்ராம் என்ற ட்விட்டர் பயனர், “பொருளாதார நெருக்கடி காரணமாக விமான சேவையை தனியாருக்கு விற்ற இலங்கை அரசு. ஜி- இதையே இப்பதான் விற்கறீங்களா?” என்று இந்திய விமான சேவையை தனியார் மயமாக்கியது குறித்து மீம்ஸ் மூலம் கிண்டல் அடித்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “விமான சேவையை தனியாருக்கு விற்ற இலங்கை, இதற்கெல்லாம் விதை போட்டது… யாரு? நம்மாளு.. தான்…!!!” என்று பிரதமர் மோடியை மறைமுகமாக மீம்ஸ் மூலம் விமர்சித்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி மற்றொரு ட்வீட்டில், “மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகை ரத்து… வயசாளிகள் பாவம்… டே!!” என்று மீம்ஸ் மூலம் இடித்துரைத்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலமே தெரியாது என்று கூறியதற்கு, நெல்லை அண்ணாச்சி, “பயபுள்ள நம்மளதான் கலாய்குதோ… மோடிஜி” என்று மீம்ஸ் மூலம் கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.
கல்கி குமார் என்ற ட்விட்டர் பயனர், “மோடி: எனக்கு ஆங்கிலம் நல்லா தெரியும்…
எங்க ஆங்கிலத்தில் பேசு…
மோடி: Oh My God” என்று கூறுவதாக கலாய்த்துள்ளார்.
பேரறிவாளனின் விடுதலைக்காக 30 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட அவருடைய தாக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பேரறிவாலன் தனது விடுதலை குறித்து ஊடகங்களிடம் கூறுகையில், அம்மாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

இது குறித்து மீம்ஸ் பாலா என்ற ட்விட்டர் பயனர், “இந்த உலகத்தில் தாயைவிட பெரிய சக்தி வேறு எதுவும் இல்லை” என்று கே.ஜி.எஃப் மீம்ஸ் போட்டு பாராட்டியுள்ளார்.
சத்ரிய பிரியன் என்ற ட்விட்டர் பயனர், இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே, காங்கிரசையும் திமுகவையும் சொல்வதைப் போல ஒரு மீம்ஸ் போட்டுள்ளார். அதில், காங்கிரசும் திமுகவும் ராஜபக்சேவைப் பார்த்து யோவ் இந்த சீரியசான நேரத்திலும் சிரிக்குற? அதற்கு ராஜபக்சே திமுகவையும் காங்கிரஸையும் பார்த்து, சொல்வதாக, இல்ல ஆண்டவன் உங்க ரெண்டு பேரையும் என்ன பண்ண போரான்னு நினைச்சே சிரிப்பு வந்துடுச்சி என்று கம்மெண்ட் அடித்துள்ளார்.
பலரும் பழைய மீம்ஸ்களைக் கொண்டுவந்து போடுவது குறித்து விஜய் குட்டி விஜே என்ற ட்விட்டர் பயனர், “ஆதிகாலத்து மீம்ஸ் வீடியோ எல்லாம் இப்ப கொண்டு வந்து டைம்லைன்ல போடுறானுங்க போதும்டாப்பா” என்று கலாய்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“