New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/meera-krishana.jpg)
Chithi 2 Serial Actress Dance to Vaathi Coming Song : 1980-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வளம் வந்தவர் நடிகை ராதிகா. பெரியதிரையில் முத்திரை பதித்த அவர் சீரியல் மூலம் சினத்திரைக்கு வந்தார். சினிமாவை போல சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பை பெற்ற இவரது, நடிப்பில், கடந்த 1999 ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுவரை சன்டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடர் தமிழக மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றது. குறிப்பாக 90 கிட்ஸ்களுக்கு பிடித்தமான சீரியலாகவும் அமைந்தது.
சி.ஜே.பாஸ்கர் இயக்கியிருந்த இந்த ராதிகாவுடன் நடிகர் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த சீரியல் தற்போது காலை 9 மணிக்கு மறுஓளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த சீரியலின் 2-ம் பாகமாக சித்தி 2 ஒளிபரப்பாகியது. வெற்றிகராமாக ஒளிபரப்பான இந்த சீரியல், தொடங்கிய சில ஓரிரு மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உட்ப சில கதாப்பாத்திரஙகள் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் இத்தொடரிலிருந்து நடிகை ராதிகா விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,“மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். 'சித்தி 2' மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ராதிகா நடித்த கதாப்பத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்று ஒருபுறம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது இந்த தொடரில், கவினின் அம்மா கேரக்டரில் நடித்து வரும் மீரா கிருஷ்ணா, மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.