பொதுவெளியில் பின்னி பிணைந்து சண்டையிட்டுக்கொண்ட சாரை பாம்புகளை பிடித்த பாம்புபிடி வீரர், அதனை பிடித்து அதன் வாழ்விடத்தில் விடுவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாநகரக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் செடிகளை ஒட்டிய இடத்தில், இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து சண்டையிட்டுக் கொண்டன. பாம்புகள் பொதுவெளியில் நடமாடுவது குறித்து, பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் தரப்பட்டன. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் மோகன், அங்கிருந்த பாம்புகளை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த பாம்பு விஷமற்ற சாரை பாம்பு என்பது தெரிய வந்தன.
செடிக்குள் ஓடி பதுங்கிய சாரைப்பாம்புவை பாம்பு பிடி வீரர் மோகன் பிடித்து பையில் அடைத்தார். இது குறித்து முன்னதாக வனத்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அதன் வாழ்விடத்தில் சாரை பாம்புகள் பத்திரமாக பாதுகாப்புடன் விடப்பட்டன. இதுகுறித்து பாம்பு பிடி வீரர் மோகன் கூறுகையில், சாரைப்பாம்புகள் விஷமற்றவை. சாரை பாம்புகள் எலிகளை வேட்டையாடுவதால், சாரைப்பாம்புகள் உள்ள இடத்தில் எலி தொல்லையோ, எலியால் ஏற்படும் சுகாதார சீர்கேடோ இருக்காது.
நிலத்தில் விளை பயிர்களை சேதப்படுத்திகின்ற எலிகளை சாரை பாம்புகள் உண்பதனால், உழவர்களின் நண்பன் சாரைப்பாம்பு என்றும் அழைக்கப்படுகின்றன. நம் நிலத்திற்கு சாரைப்பாம்புகள் மிகவும் முக்கியமானவை. சாரை பாம்புகளை பார்த்தால், அதனை அடிக்கவோ விரட்டவோ முற்படக்கூடாது. வனத்துறைக்கும் வன உயிர் ஆர்வலர்கள் பாம்பு பிடி வீரர்களுக்கும் தகவல் தர வேண்டும்.
சாரைப்பாம்பு உள்ளிட்ட அனைத்து பாம்புகளும் உயிருடன் அதன் வாழ்விடத்தில் வாழ்வது உயிர் சூழலுக்கு மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“