Tamil Viral Twitt : அம்மா… இந்த சொல்லுக்கு உலகில் வேறு எந்த சொல்லும் ஈடாக முடியாது. ஒரு குடும்பத்தில் பிறந்து திருமணத்திற்கு பின் வேறு குடும்பத்திற்கு சென்று தன் வாழ்நாள் முழுவதும் குடும்பம் கணவர் குழந்தை என அனைவருக்காகவும் வாழ்வதே பெண்களின் வாழ்க்கையாக உள்ளது. வெளியில் அலுவலக வேலைக செல்வோரக்கு கூட வாரத்தில் ஒருநாள் விடுமுறை, வருடத்திற்கு இத்தனை விடுமமுறை என்று ஓய்வுக்கு நேரம் ஒதுக்க பல சூழ்நிலைகள் அமையும்.
ஆனால் குடுபத்திற்காக தன் வாழ்நாளையே செலவு செய்யும் அம்மாக்கள் இவ்வுலகில் ஏராளம். வருடம் 365 நாட்களும் அவர்களுக்கு உண்டான வேலை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் இருந்து அவர்கள் ஓய்வு பெறுவது என்பது பலருக்கும் எட்டாக்கனிதான். இப்படி தன் வாழ்நாளை தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்க்காக அர்ப்பணிக்கும் தாய்மார்களை அவர்களின் பிள்ளைகள் மற்றும் கணவர் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறார்களாக என்றால் அது கேள்விக்குறிதான்.
தொடக்கத்தில் சொன்னது போல அம்மா என்ற சொல்லுக்கு இவ்வுலகில் ஈடு இணை இல்லை என்று சொன்னாலும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களின் பிள்ளைகளுக்கு இவர்கள் பாரமாகத்தான் தெரிகிறார்கள். இதனால் ஊரில் உள்ள பல முதியோர் இல்லங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. முதியோர் இல்லத்தில் இருந்தாலும் பல அம்மாக்கள் தனது பிள்ளைகளை விட்டுக்கொடுப்பதில்லை.
அதே போல் ஒரு சில மகன்கள் தனது அம்மாவை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொள்வதில் மிகுந்த அக்கரையுடன் செயல்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் தற்போது ஒரு மகன் தனது அம்மாவின் பிறந்த நாளுக்காக ஒரு பரிசை கொடுக்கிறார். அதை பார்த்து அந்த அம்மா தனது மன மகிழ்ச்சியை கண்ணீர் கலந்த புன்னகையுடன் வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில், இந்த பரிசின் விலை இவ்வவுதான் ஆனால் என் அம்மா பட்ட சந்தோஷத்திற்கு விலையே கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.
Adhula Irundha Mobile-oda Velai Verum 8800 Rs Dhan…! Aana Enga Amma Patta Sandhoshathuku Velayae Kidayaadhu ❤️ Birthday Gift..! pic.twitter.com/4QZJE7Ocii
— Vignesh (@VigneshSammu) January 5, 2022
அம்மாவின் முகத்தில் இப்படி ஒரு சந்தோஷத்த பார்க்க மகன்கள் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் பல மகன்கள் இந்த பாக்கியத்தை இழந்துவிடுகின்றனர். கஷ்டங்கள் இருந்தாலும் தன்னை இன்முகத்துடன் பார்த்துக்கொண்ட மகன்கள் தனது அம்மாவை பாரமாக நினைக்கும் தற்போதைய சூழலில், அம்மாவின் பிறந்த நாளுக்கு பரிசு கொடுத்து அவரது மகிழ்ச்சியை பார்த்து மன மகிழும் இந்த மகனின் செயல் உணமையிலேயே கிரேட் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil