New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/FJdjL06aQAUkEzW.jpg)
நாமும் புகைப்படத்தை மேலோட்டமாக கவனித்தால் வெறும் 4 யானைகள் மட்டுமே இருப்பது தெரியும். நீங்கள் நான்கு என்று பதில் அளித்தால் அந்த பதில் தவறு தான்.
How many elephants are in this photo : இந்த புகைப்படத்தில் மொத்தம் எத்தனை யானைகள் இருக்கிறது என்று உங்களால் கூறமுடியுமா? என்று நாங்கள் கேட்கவில்லை. இந்திய வனத்துறை அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில யானைகள் ஒன்றாக நின்று நீர் அருந்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இப்படி ஒரு புதிர் போட்டுள்ளார். நாமும் புகைப்படத்தை மேலோட்டமாக கவனித்தால் வெறும் 4 யானைகள் மட்டுமே இருப்பது தெரியும். நீங்கள் நான்கு என்று பதில் அளித்தால் அந்த பதில் தவறு தான்.
How many elephants are in the picture?
— Susanta Nanda (@susantananda3) January 19, 2022
Credit:Wildlense Eco foundation pic.twitter.com/viUGya91uX
Wildlense Eco foundation எடுத்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து அவர் ஒரு கேள்வி கேட்க இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது. இதுவரை இந்த ஒரு புகைப்படத்தை மட்டும் 100க்கும் அதிகமானோர் ரிட்வீட் செய்துள்ளனர்.
Could get six. pic.twitter.com/5b7bX2hwJw
— 𝕽𝕾🕊️ 🇮🇳راکیش سنگھ 🌾🚜 (@iam_rakeshsingh) January 19, 2022
நெட்டிசன்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு உத்து உத்து பார்த்து ஆய்வு செய்ததில் பலரின் விடைகள் என்னவோ ஆறு என்ற எண்ணில் நிலைத்து நிற்கிறது. நாமும் அவர்களின் பதில்களை பூதக்கண்ணாடி வைத்து பார்க்கும் போது ஒரு வேளை 6-ஆக தான் இருக்குமோ என்று எண்ணக் கூட தோன்றுகிறது. ஆனால் 6 என்ற பதிலும் தவறு தானாம்.
7. Except the last one the remaining 3 have almost hidden elephants just behind them. When you totally zoom in, you can see them
— Garhwali Tamil (@anand_2000v) January 20, 2022
இந்த புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த ஒரு சுவாரசியமான தகவல்களையும் சுஷாந்தா தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மொத்தம் இதில் 7 யானைகள் உள்ளன. அது தான் சரியான விடையும் கூட. ஒரு வேளை நீங்கள் 7 என்று கணித்திருந்தால் சபாஷ். இப்படி ஒரு பெர்ஃபெக் ஷாட்டை பெற 20 நிமிடங்களில் 1400 புகைப்படங்களை வைல்ட் லென்ஸ் இந்தியா எடுத்துள்ளது. மிகவும் சவாலான புகைப்படம் தான். வெகு சிலரால் மட்டுமே இதற்கான சரியான பதிலை அளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.