மினி இட்லி, பொடி இட்லிலாம் பழசு; இதுக்கு பேரு தான் குச்சி இட்லி
ஒரு புது வகையான டெக்னிக்கை பயன்படுத்தி இப்படியான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை பெங்களூரு நிகழ்த்தி இருக்கிறது. ஐஸ்கிரீம் குச்சியில் இட்லி. பேக்கிங்க் ஈஸியா இருக்கும், சட்னியை கையால் தொட வேண்டாம் என்று உருவாக்கியிருப்பார்களோ என்னவோ?
tamil trending news idli with ice-cream stick : காலையில் தினமும் நாம் கை தொழும் தெய்வம் இட்லி. இன்று தமிழகர்களின் பாரம்பரிய உணவு என்றே அழைக்கப்படும் இட்லிக்கு இரண்டு தொடுகை, சாம்பாருடன் சாப்பிட்டால் அந்த நாள் நன்றாக தான் இருக்கும். ஆனால் தினமும் அதையே சாப்பிட்டு போர் அடித்திருக்கும் என்று கொஞ்சம் இன்னோவேட்டிவாக மினி இட்லி, பொடி இட்லி, ஏன் கோழி இட்லிலாம் கூட அடிக்கடி நம்முடைய உணவு பழக்கங்களில் வந்து சேர்ந்தது. ஒரு புது வகையான டெக்னிக்கை பயன்படுத்தி இப்படியான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை பெங்களூரு நிகழ்த்தி இருக்கிறது. ஐஸ்கிரீம் குச்சியில் இட்லி. பேக்கிங்க் ஈஸியா இருக்கும், சட்னியை கையால் தொட வேண்டாம் என்று உருவாக்கியிருப்பார்களோ என்னவோ?
Advertisment
Innovative food technology of how the Idli got attached to the Ice cream stick. Bengaluru and it's food innovations are always synonymous!@vishalk82pic.twitter.com/IpWXXu84XV
தற்போது இந்த இட்லி கண்டுபிடிப்பு ஃபுட்டிஸ் மத்தியில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து மிகவும் நகைச்சுவையான கருத்துகளையும், ஒரு சில யோசிக்க தூண்டும் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். இந்த இட்லி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil