Tamil Trending news Ruby Roman variety of grapes : சாதாரண திராட்சையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக எடை கொண்ட திராட்சை வகையான ரூபி ரோமன் ஜப்பான் நாட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதன் விலை என்ன என்று கேட்டால் நம் அனைவருக்கும் நிச்சயம் நெஞ்சு வலி வந்துவிடும். ஒரு கொத்து திராட்சை ரூ. 33 ஆயிரத்திற்கு விற்பனையாகிறதாம். அதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று இப்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.
அவர்கள் வைத்திருக்கும் நான்கு கலர் பேலட்டில் இருக்கும் நிறங்களுடன் திராட்சையின் நிறங்கள் ஒத்துப்போனால் 90 அமெரிக்க டாலர்கள் முதல் 450 டாலர்கள் முதல் விற்பனையாகும் என்று பிஸினஸ் இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது. நிறம், மனம், அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்த திராட்சையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பழங்கள் பழுத்தவுடன் முறையாக அதனை ஆய்வு செய்து பிறகே விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.
ரோமன் ரூபி போன்ற சிவப்பு நிறத்தில் இவ்வளவு பெரிய திராட்சைகள் உலகின் வேறெந்த பகுதிகளிலும் பார்க்க முடியாது என்று கூறுகிறார் இஷிகாவா மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முதன்மை ஆராய்ச்சியாளர் ஹிரோஷி இசு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil