New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/ranthambore-tiger-dog-attack.jpg)
சவாரி வாகனங்களுக்கு நடுவே நாயை தாக்கிய புலி
திங்கள் கிழமை காலை சவாரி சென்ற பயணிகள் புலியின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
சவாரி வாகனங்களுக்கு நடுவே நாயை தாக்கிய புலி
Tigress attacks dog near safari vehicles in Rajasthan : காடுகளுக்குள் சவாரி செய்யும் போது வனவிலங்குகளை பார்க்கும் ஒரு த்ரில் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. ஆனால் கணப்பொழுதில் அனைத்தும் மாறிவிடும். நாம் வாழ்வில் விரும்பவே விரும்பாத ஒரு அனுபவத்தை தரவும் வனவிலங்குகள் தயங்குவது இல்லை. ராஜஸ்தானில் அமைந்திருக்கும் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ஒரு பெண் புலி அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயிர் பயத்தை காட்டிவிட்டது என்று தான் கூற வேண்டும்.
அந்த வீடியோவில் சுற்றுலாவாசிகள் இரண்டு சவாரி வண்டிகளில் நின்று தூரத்தில் இருக்கும் புலியை பார்த்துவிட்டனர். சிலர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு வாகனங்களுக்கு நடுவே சட்டென பாய்ந்த அந்த புலி, அருகில் இருக்கும் நாயை அடித்துக் கொன்றது. திங்கள் கிழமை காலை சவாரி சென்ற பயணிகள் புலியின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
ரந்தம்பூர் தேசிய பூங்காவின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுல்தானா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெண் புலி நாயை பூங்காவின் முதல் மண்டலத்தில் தாக்கியதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.