/tamil-ie/media/media_files/uploads/2021/10/cats-3.jpg)
பல ஆண்டுகளாக காட்டுக்கு ராஜா யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. புலிகள் இருந்தால் தான் அந்த காடு முழுமையடையும் என்றும் சிங்கம் பெரும்பாலும் புல்வெளிகளில் வாழ்வதால் அது எப்படி காட்டு ராஜா ஆக முடியும் என்ற கேள்வியெல்லாம் பெரும் விவாதங்களை முன்வைக்கிறது. அந்த விவாவதத்தை நாம் அப்படியே ஓரமாக வைத்துவிட்டு இந்த வீடியோ பக்கம் வருவோம்.
After taking the booster dose pic.twitter.com/bpJe72Ex95
— Susanta Nanda (@susantananda3) October 7, 2021
மற்ற மிருகங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். சிங்கம் மறைந்திருந்து தாக்கி தன்னுடைய வேட்டையை சிறப்பாக முடித்துக் கொள்ளும். ஆனால் இங்கே சிங்கம் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. நீருக்குள் ஏதோ ஒன்று நீந்தி வருவது போல இருக்கவும், ஏதோ டிஸ்கவரி சேனல் விவகாரமாய் இருக்கிறது என்று கூர்ந்து கவனித்தால் கை அகலம் கூட இல்லாத ஒரு குட்டி ஆமை.
நீங்க ரொம்ப நல்ல ஆஃபிசர்… மீட்டெடுத்த வனத்துறை அதிகாரியை கட்டிக்கொண்ட குட்டியானை
நகர்ந்து நகர்ந்து சிங்கத்தின் வாய் அருகே போய் நின்று கொண்டு ஏதோ செய்ய முயலுகிறது. ஆனால் சிங்கமோ இந்த ஆமை வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து அருகே சென்று தண்ணீர் அருந்துகிறது. அந்த ஆமை விடாமல் கூடவே வர நகர்ந்து கொண்டே இருக்கிறது அந்த சிங்கம்.
செல்ஃபி ஸ்டார் நடாகாஷி கொரில்லா மரணம்; பாதுகாவலர் மடியிலே உயிரைவிட்ட சோகம்!
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை சுமார் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.