தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு தம்பதி செய்த செயல் அனைவரையும நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக பல தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவையை சேர்த்த ஒரு தம்பதி தங்களது நகைகளை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தடுப்பூசி செலுத்துக்கொள்வதற்காக சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், வெயிலின் தாக்கத்தால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக அறிந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய தம்பதி, சற்றும் யோசிக்காமல் தங்களிடம் இருந்த நகைகளை 2.20 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து அந்த பணத்தில் 100 மின் விசிறிகளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மருத்தவமனை முதல்வர் ரவீந்திரனை சந்தித்து மின்விசிறிகளை வழங்கியிருக்கின்றனர். மேலும் தங்களைப்பற்றி எந்த விவரங்களும் வெளியிட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் நகைகளை அடமானம் வைத்துதான் மின்விசிறிகள் வாங்கியிருப்பதை அறிந்த ரவீந்திரன், மருத்துவமனையின் வசதிக்கு ஏற்ப சில மின்விசிறிகளை எடுத்துக்கொண்டு எஞ்சிய மின்விசிறிகளை திரும்ப கொடுத்து நகைகளை மீட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் அந்த தம்பதி இதனை ஏற்க மறுத்துள்ளனர். தொடர்ந்து கோவை மாவட்ட இது தொடாபாக தம்பதியிடம் பேசியதை தொடர்ந்து மீதமுள்ள மின்விசிறிகளை பெற்றுக்கொள்ள தம்பதி சம்மதம் தெரிவித்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் தொடரும் தன்னிடம் பணம் இல்லை என்றாலும் நகைகளை அடமானம் வைத்து உதவிய இந்த தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil