scorecardresearch

ஸ்வெட்டர், மஃப்ளர், குல்லா… இதற்கு இடையே ஒரு காலி பக்கெட் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

இந்த வகை புகைப்படங்களில் மறைந்திருக்கும் எளிய விஷயங்களைக் கண்டறிய மிகுந்த கவனமும் திறமையும் தேவை

ஸ்வெட்டர், மஃப்ளர், குல்லா… இதற்கு இடையே ஒரு காலி பக்கெட் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஆப்டிக்கல் இல்யூஷன் (ஒளியியல் மாயை) என்று வரும்போது அதனை தெளிவுபடுத்திக்கொள்வது மிகவும் கடினம். ஒரு படத்தை பார்க்கும்போது ஒரு மாதிரியாகவும், அதையே உற்று நோக்கும்போது வேறு மாதிரியாகவும் இருக்கும் அதேபோல் சில படங்களில் வெளியில் ஒரு உருவம் தெரிவது போல் இருந்தாலும், உள்ளே பல உருவங்களை கண்டுபிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டடிருக்கும்.

இந்த வகை புகைப்படங்களில் மறைந்திருக்கும் எளிய விஷயங்களைக் கண்டறிய மிகுந்த கவனமும் திறமையும் தேவை. அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிடேஜெம்ஸ் (HolidayGems.co.uk) என்ற இணையதளத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், ஸ்வெட்டர்கள், மப்ளர்கள், கம்பளி சாக்ஸ், தொப்பிகள், கையுறைகள் போன்ற குளிர்காலத்திற்கான அனைத்துப் பொருட்களையும் முக்கியமாகக் கொண்டுள்ளது.

ஆனால் இதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காலி வாளியைக் கண்டுபிடிப்பதே சவாலாக இருக்கும். நீங்கள் முதலில் வாளியைத் தேடத் தொடங்கும் போது, ​​இந்த படத்தில் உங்கள் மனதை கவரும் மர்மங்களை  தீர்ப்பது மிகவும் எளிதானது என்று நீங்கள் உணருவீர்கள். இந்த வாளிகளை சிலர் நில நொடிகளில் கண்டுபிடிப்பார்கள். ஒரு சிலருக்கு சற்று நேரம் எடுக்கும்.

நீங்கள் படத்தைப் பார்க்கும்போது, ​​மேல் வலது மூலையில் இருந்து தேடத் தொடங்குங்கள். இரண்டாவது வரிசையின் இறுதியில் வாளி உள்ளது. இந்த வாளி இளஞ்சிவப்பு கைப்பிடியுடன் ஒரு பச்சை நிறத்தில் உள்ளது இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வெளிவருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், இணையத்தில் இப்படி ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதேபோன்று ஏற்கனவே வெளியான கம்பளத்தில் ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிக்க புகைப்படம் பெரிய சவால் நிறைந்ததாக இருந்தது. நிறைய பேர் இதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தனர். பின்னர், ஃபோன் முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது, கம்பளத்தின் மீது கிடந்தது, ஆனால் வடிவங்கள் காரணமாக, அது கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil viral aru find empty bucket in this optical illusion image

Best of Express