scorecardresearch

உங்க கண்ணுக்கு மரம்தான் முதலில் தெரிகிறதா?

Tamil Viral Update : ஒளியியல் மாயைகள் வாழ்க்கையைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதாகக் கூறினாலும், மற்றவை நம் ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.

உங்க கண்ணுக்கு மரம்தான் முதலில் தெரிகிறதா?

நமது உடல் உறுப்புகளில் மூளை மற்றும் கண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகள். மூளை யோசிப்பதற்கும் கண்கள் அதன் செயல்திறனை பிரதிபலிப்பதற்கும் முக்கிய பணியை செய்கிறது. ஆனால் நமது மூளை மற்றும் கண்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சோதிக்க பல வழிகள் உள்ளது.

இதில் முக்கியமானது ஆப்டிகல் மாயை. ஒரு சாதாரண புகைப்படத்தை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க முடிந்தால் கண்களுக்கும் மூளைக்கும் சோதனை கொடுப்பது போல். அந்த வகையில் சில ஒளியியல் மாயைகள் வாழ்க்கையைப் பற்றி நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதாகக் கூறினாலும், மற்றவை நம் ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.

வாழ்க்கையைப் பற்றி நீங்கள் உணருவதை விளக்குவதாகக் கூறும் அத்தகைய ஒளியியல் மாயை கொண்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு படம் தான் இது.

Jagranjosh

இந்த புகைப்படத்தில், நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்கள்? ஒரு மரமா, புலியா அல்லது வெறும் புலியின் முகமா?

ஒரு மரம்

நீங்கள் முதலில் ஒரு மரத்தைக் கண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள்.

ஆளுமைப் பண்புக்கூறுகள்: நீங்கள் வாழ்வில் நிறைந்திருக்கிறீர்கள், உங்கள் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் திறனைப் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு மரம் மற்றும் புலி

நீங்கள் முதலில் புலியையும் மரத்தையும் பார்த்தால், உங்களுக்கு நடக்கும் எல்லாவற்றிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆளுமைப் பண்புகள்: நீங்கள் தைரியமானவர். அதிக அறிவு மற்றும் அனுபவங்களுக்காக பாடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.

புலியின் முகம்

புலியின் முகத்தை மட்டும் கவனித்தால், சமீபகாலமாக நீங்கள் கொஞ்சம் கடுமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆளுமைப் பண்புகள்: நீங்கள் அற்புதமானவர் மற்றும் கடுமையானவர் என்று அர்த்தம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil viral check how what do you see first tree or tiger