சமீப காலமாக இணையத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன் வகையை சார்த்த புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் வைரலாகி வருகிறது. இந்த மாதியான படங்கள் பெரும்பாலும் மர்மம் நிறைந்ததாகவும், வெளியில் ஒரு உருவரும் உற்று நோக்கினால் பல உருவங்களும் தெரியும் வகையில் அமைத்திருக்கும்.
இந்த வகையான படங்களை நாம் பார்க்கும்போது நம் கண்களுக்குதெரியும் உருவத்தை வைத்து நமது ஆளுமையை தெரிந்துகொள்ளலாம் என்று கூறுவது உண்டு. அந்த வகையில் தற்போது ஒரு கம்பளப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் சில சமயங்களில் உங்களைக் குழப்பமடையச் செய்து, உங்கள் கண்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் இந்த கம்பளப் படம் வெளியில் பார்க்கும்போது வெறுமனே கம்பளமாக தெரிந்தாலும், அதில் மறைந்துள்ள செல்போனை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால விடும் வகையில் உள்ளது.
கம்பளத்தின் படத்தில், நீங்கள் செல்போனைப் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த கம்பளத்தை உற்று நோக்கினால் அதில் செல்போன் தெரியும். படத்தில் நீல நிற பட்டையை கூர்ந்து பாருங்கள். இது படத்தின் வலது பக்கத்திற்கு அருகில் இருக்கலாம்.
இந்த அழகான கம்பள படத்தில், வலது புறத்தில் இரண்டு கீற்றுகள் உள்ளன. இதில் போன் இருக்கிறதா? உற்று நோக்குஙகள். இப்போது உஙகளால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா?
படத்தில் உள்ள வெள்ளை அட்டவணையில் நீல நிற பட்டையைப் பாருங்கள். இன்னமும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த கம்பளப் படத்தின் மேல் வலது புறத்தில் உள்ள வெள்ளை மேசையருகே இருக்கும் நீல நிறப் பட்டையை இன்னும் தெளிவாகப் பார்க்கும்போது ஒரு செல்போன் தெரியும். அல்லது ஐபோன் கேமரா போன்று தெரியும். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
இந்த புகைப்படம் கடந்த காலங்களில் பேஸ்புக்கில் வைரலானது மற்றும் பல்வேறு நபர்களால் பகிரப்பட்டது. தற்போது பல சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“