வயிற்றில் குழந்தை… வைரல் அனுஷ்கா சர்மா

தனது கர்ப்ப கால அனுபவத்தையும், கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.

By: January 1, 2021, 12:58:01 PM

பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான
அனுஷ்கா சர்மா தனது கர்ப்ப வயிற்றை காட்டி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வோக் இந்தியா ஃபேஷன் இதழுக்கு 2021-க்கான அட்டை படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவுள்ளார். மற்றும் தனது கர்ப்ப கால அனுபவத்தையும், கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

கர்ப்ப காலத்தில் அனுஷ்கா சர்மாவின் நட்பு வட்டாரங்களுடனான உறவு எந்த வகையில் இருந்தது என அந்த இதழ் எழுப்பிய கேள்விக்கு, “என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல, நான் சந்தித்த அனைத்து பெண்களுமே மிக மென்மையுடன் நடந்து கொண்டார்கள். மிகவும் உதவியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் வெளியுலகம் தான் சகோதரித்துவதை குறைத்து மதிப்பிடுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

” தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு அனிமல் – தீமில் உடை வடிவமைத்து உள்ளனர். ஆண் குழந்தைகள் நீல நிறத்திலும் பெண் குழந்தைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் தான் உடைகளை அணிய வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது, குழந்தைகள் எந்த நிற உடை வேண்டும் என்றாலும் அணியலாம்” என்று நடிகை கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

“இந்த லாக் – டவுன் வித்தியாசமான ஒரு அனுபவமாகவே இருந்தது. இந்த சமயத்தில் விராட் கோலி மிகவும் உதவியாக இருந்தார். மருத்துவர்களை சந்திக்க மட்டுமே வெளியில் சென்றோம். இந்த சமயத்தில் நிறைய நேரம் கிடைத்தது. யோகா செய்வது, உடற்பற்சி மேற்கொள்வது என பயனுள்ளதாகவே செலவிட்டேன்” என்று அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

“எந்த அளவுக்கு உங்களால் கற்க முடியுமோ அந்த அளவிற்கு கற்க வேண்டும். அதற்காக அழுத்தம் கொடுத்து தான் கற்க வேண்டும் என்று கிடையாது.வாழ்க்கை என்பது வளைவு நெளிவுகளை கொண்டது. எனவே எப்பொழுதுமே தயாராக இருக்க வேண்டும்” என்று தாம் பெற்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Anushka sharma flaunts baby bump on fashion magazines latest cover looks gorgeous

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X