அட! இவரு அவரு தான? ஆனா ஏன் குல்ஃபி விக்கிறாரு?

இவர் உருவத்தை மறந்துவிடலாம்.. ஆனால் இவர் பாடும் பாடல் தனித்து நிற்கிறது என்பதை இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கே புரிந்துவிடும்.

Viral video, donald trump lookalikes

Viral Video : பாத்த உடனே உங்களுக்கு அவரு ஞாபகம் தான வருது? அட… யாருன்னு கேட்றாதீங்க… அவரு தாங்க… சரி சரி டென்சன் ஆக வேண்டாம்.. பார்ப்பதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் போன்ற ஒருவர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். குல்ஃபி விற்பனை செய்து வரும் அவருடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது இலையா? இல்லை மாயாஜாலமா? அழகான பட்டுப்பூச்சியின் கண்கவர் வீடியோ

பாகிஸ்தானைச் சேர்ந்த பாடல் ஆசிரியர் ஷெசாத் ராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் Wah. Qulfi walay bhai, Kya baat ha என்று குறிப்பிட்டு அந்த குல்ஃபி விற்பவர் பாடும் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார். மிகவும் திறமையாக பாடல் பாடும் அவருக்கு சரும நிற குறைபாடு இருப்பதால் அவருடைய சருமம், கேசத்தின் நிறமும் ஆங்கிலேயர்களை போன்றே இருக்கிறது. சட்டென பார்க்கும் போது இது டொனால்ட் ட்ரெம்ப் தான் என்றும் அவர் தான் குல்ஃபி விற்கிறார் என்றும் தான் யாருக்கும் தோன்றும். இவர் உருவத்தை மறந்துவிடலாம்.. ஆனால் இவர் பாடும் பாடல் தனித்து நிற்கிறது என்பதை இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கே புரிந்துவிடும். இந்த வீடியோவுக்கும் இவரின் திறமைக்கும் என்ன மதிப்பெண்கள் தருவீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral news donald trump lookalike sells kulfi in pakistan

Next Story
விரலை தத்ரூபமாக வெட்டி ஒட்டும் மாயாஜாலம்! சக்கைபோடு போடும் வீடியோ!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com