/tamil-ie/media/media_files/uploads/2021/06/hippo-watermelon_1200_twt.jpg)
Tamil Viral News Hippo crushes whole watermelon : தர்ப்பூசணி இல்லாத கோடை காலத்தை நினைத்து பார்த்தால் கண்ணெல்லாம் வேர்க்கிறது. அது எப்படி சாத்தியம் என்று கூட உங்களுக்கு தோன்றலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் இந்த தர்ப்பூசணி தான் கோடை கால ரட்சகர்.
நம்மைப் போன்றே ஒரு ”தர்ப்பூசணி வெறியர்” ஆசை தீர அப்பழத்தை சாப்பிடும் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
சான் ஆண்டனியோ விலங்குகள் காப்பகத்தில் திமோத்தி என்ற நீர் யானை ஒன்றுக்கு தர்ப்பூசணி பழம் ஒன்று உணவாக தரப்படுகிறது. தனது இரண்டு அண்ணங்களுக்கும் நடுவே இருந்த தர்ப்பூசணியை ஒரே கடி! அவ்வளவு தான்… அதுக்கு பிற்றகு என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
What better way to kick off summer than a good old fashioned hippo watermelon smash?! 🍉🦛☀️ pic.twitter.com/zjMVARtxpq
— San Antonio Zoological Society 🦍 (@SanAntonioZoo) June 9, 2021
தர்ப்பூசணி பழ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு நெட்டிசன்களை கையில் பிடிக்க முடியவில்லை. வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்கிறது என்றால் அது சர்வ நிச்சயமாக இந்த ஹிப்போவிற்கு தர்ப்பூசணி வழங்குவதாக தான் இருக்கும் என்று பலரும் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.