தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?

Bigboss Gabriella Charlton viral photo tamil news: கேப்ரியல்லா நடிகர் தனுஷ் நடித்த ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். 

Tamil viral news in tamil Bigboss gabriella charlton childhood photo with dhanush goes viral

Bigboss gabriella charlton childhood photo viral tamil news: கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4ல் கேப்ரியல்லா போட்டியாளராக கலந்துகொண்டார். கேப்ரியல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1′ நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் சின்னத்திரையில் தோன்றி இருந்தார். அதோடு நடிகர் தனுஷ் நடித்த ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். 

கேப்ரியல்லா பிக்பாஸ் வீட்டில் ஆடும் நடனத்தை பார்க்கவே அவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. அந்த வீட்டில் இருந்த நண்பர்களுடன் அவருக்கு சில முரண்பாடுகள் இருந்த போதும், போட்டியை ஸ்போட்டிவாக எடுத்துக்கொண்டார். இருப்பினும் இவரது நண்பர்களின் ரசிகர்கள் இவர் மீது பல விமர்சனங்களை அடுக்கினர். 

இந்த பிக்பாஸ் சீசனில் ஆரி அர்ஜுன் மட்டும் பாலாஜிக்கு இடையில் கடும் போட்டி நிலவியதால், இதில் தான் வெற்றி பெற முடியாது என நினைத்த கேப்ரியல்லா 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறினார். இதற்கு பலரும் ஸ்மார்ட்முவ் என்று கூறி  பாராட்டு தெரிவித்தனர். 

தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை பிசியாக வைத்திருக்கும் கேபி, விஜய் டிவில் ஒளிபரப்பாகும்முரட்டு சிங்கிள்ஷோவில் பங்கேற்று வருகிறார். அதோடு அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிகின்றன. இந்நிலையில் கேப்ரியல்லாவின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ்வுடன் உள்ளார். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral news in tamil bigboss gabriella charlton childhood photo with dhanush goes viral

Next Story
விரலை தத்ரூபமாக வெட்டி ஒட்டும் மாயாஜாலம்! சக்கைபோடு போடும் வீடியோ!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com