Advertisment

இதெப்படி சாத்தியம்? - சுறாவை அலேக்காக கவ்விச் செல்லும் 'மெகா' பறவை! (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Viral news, Tamil Viral Video, Latest Viral video, viral news, viral video, தமிழ் வைரல் வீடியோ, வைரல் வீடியோ, லேட்டஸ்ட் வைரல் வீடியோ

Tamil Viral news, Tamil Viral Video, Latest Viral video, viral news, viral video, தமிழ் வைரல் வீடியோ, வைரல் வீடியோ, லேட்டஸ்ட் வைரல் வீடியோ

Tamil Viral Video: கொரோனா வைரஸ் கோரத்தில், மனிதர்களுடைய மூளை, இதயம் என அனைத்து ஹார்ட்வேர், சாஃ ப்ட்வேர் அம்சங்களும் அந்து போய் கிடக்க, வைரலாகும் வீடியோ ஒன்றால் இதென்ன புது கிரகம் என்பது போல் டஸ்ஸாகி உள்ளனர்.

Advertisment

கடற்கரை ஓரத்தில் பறவை ஒன்று சுறா மீனை கவ்விச் செல்வது போன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்ஸ், உண்மையிலேயே சுறா மீனைத் தூக்கிச் செல்லும் அளவுக்கு உலகில் ஒரு பறவை இருக்கிறதா என விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

30, 2020

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரையில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கெல்லி புர்பாஜ், என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “கழுகு? பருந்து? மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தப் பறவை” என்று கேள்விகளுடன் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சுமார் 15 லட்சம் வியூஸ் கடந்துள்ளது. பலரும் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் கருத்திட்டும், தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

பொறுமை இழந்த எருமை: சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ

‘Tracking Sharks' என்னும் பிரபல ட்விட்டர் கணக்கும், இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘சுறா மீனை கவ்விச் செல்லும் இந்த பறவையின் பெயர் என்னவென்பது யாருக்காவது தெரியுமா?' எனக் கேள்வி கேட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment